Homeசெய்திகள்அரசியல்இதுதாண்டா ஆட்டம்... விஜய் கட்சியில் 1 கோடியை நெருங்கும் உறுப்பினர்கள்

இதுதாண்டா ஆட்டம்… விஜய் கட்சியில் 1 கோடியை நெருங்கும் உறுப்பினர்கள்

-

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் தீவிர ஆர்வம் கொண்டு செயலி மூலம் பலர் இணைந்து வருகிறார்கள். இதுவரை சுமார் 1 கோடி பேர் இணைந்துள்ளதாக கூறப்படுவதால் தமிழக அரசியல் கட்சிகள் கிலியடித்துக் கிடக்கின்றன.விஜய் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன? 

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கி, உறுப்பினர் சேர்க்கை கட்சி கொள்கைகள், திட்டங்கள் பற்றி அறிக்கை வெளியிட்டார். 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு. அதற்காக கட்சியின் ஆரம்ப கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதல் கட்டமாக கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவித்தார். விஜய்யின் அறிவிப்பு கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு செயலி உருவாக்கப்பட்டு ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

புதிய உறுப்பினர்கள் சேர்க்க தொடங்கிய சில தினங்களிலேயே லட்சக்கணக்கான மக்கள் கட்சியில் புதிதாக உறுப்பினர்களாக சேர தொடங்கினர். கட்சியில் இளைஞர்களும், இளம் பெண்களும் அதிகமாக சேர்ந்தனர். ஒரே நாளில் ஒன்று போல் திரண்டு கட்சியில் இணைவதற்கு
முயற்சித்ததால் இணையதள சர்வரே முடங்கியது.

இதையடுத்து சில நாட்கள் உறுப்பினர்கள் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் சர்வர் சரி செய்யப்பட்டு உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்கியது. கட்சியில் சேர்ந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 75 லட்சத்தை நெருங்கியது.

இதைத் தொடர்ந்து கட்சி யில் புதிதாக சேர்வதற்கு ஏராளமானோர் ஆர்வம் காட்டி கட்சியில் இணைய தொடங்கினர். இதையடுத்து கட்சியில் புதிதாக இணைந்தவர்களின் எண்ணிகை 93 லட்சமாக இருந்தபோது மீண்டும் சர்வரில் தடை ஏற்பட்டது.

சர்வர் சரி செய்யப்பட்டு மீண்டும் கட்சியில் பலர் புதிதாக இணைய தொடங்கினர். தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக சேர்ந்தோர் எண்ணிக்கை இன்னும் சில தினங்களில் 1கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் கட்சி தொடங்கி சில மாதங்களில் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடி நெருங்கி வருவது தி.மு.க., அ.தி. மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

MUST READ