Homeசெய்திகள்அரசியல்நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்யும் வக்ஃபு மசோதா- நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு!

நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்யும் வக்ஃபு மசோதா- நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு!

-

- Advertisement -

நம் நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்து இந்த திட்டம் கொண்டவரப்பட்டது கண்டிக்கத்தக்கது எனவும் வக்ஃபு மசோதா மீதான நாடாளுமன்றக் கூட்டுக்குழு அறிக்கையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் திருத்தங்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அமலியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளால் அவை ஒத்திவைக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்யும் வக்ஃபு மசோதா- நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு!இஸ்லாமியர்கள் தங்களது சமூகத்துக்கு தானமாக கொடுத்த சொத்துகளை நிர்வகிக்கும் அமைப்பு வக்ஃபு வாரியம் (வக்பு வாரியம்). வக்பு வாரிய சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பாக ஏற்கனவே சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கடந்த ஆண்டு லோக்சபாவில் தாக்கல் செய்தது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில் இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் அவசரம் அவசரமாக விவாதிக்கப்பட்டு கடந்த மாதம் இறுதியில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.

வக்ஃபு மசோதா மீதான நாடாளுமன்றக் கூட்டுக் குழு அறிக்கையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் திருத்தங்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் வாக்கெடுப்பின் மூலம் மசோதா ஏற்கப்பட்டது அரசியலமைப்புக்கு விரோதமானது என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிப்பை பதிவு செய்யாமல் பாஜாக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இனைந்து மசோதா தாக்கல் செய்யபட்டதை எதிர்த்து வக்ஃபு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையை திரும்பப் பெற வலியுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றனர். எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மசோதா தாக்கல் செய்ததை கண்டித்தும் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் கோஷங்கள் எழுந்துள்ளது. ஏற்கனவே சபாநாயகரை சந்தித்து புகார் தெரிவித்த நிலையில் மீண்டும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் செயல்படுத்தும் இந்த திட்டமானது. நம் நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்து இந்த திட்டம் கொண்டுவரப்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றனர். இந்நிலையில் அவை ஒத்திவைக்கப்பட்டது.

3.75 ஏக்கரில் ரூ.150 கோடியில் ஆர்.எஸ்.எஸ் கட்டடம்: இத்தனை பிரம்மாண்டமா..?

MUST READ