Homeசெய்திகள்அரசியல்எங்களுக்கு எப்போதும் ஒரே எதிரிதான் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

எங்களுக்கு எப்போதும் ஒரே எதிரிதான் – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

-

- Advertisement -

சேலம் மாவட்டம், அதிமுகவில் புதிய தொண்டர்கள் இணையும் நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றாா். பின்னர் செய்தியாளகர்களை சந்தித்தாா்.எங்களுக்கு எப்போதும் ஒரே எதிரிதான் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

மேலும் செய்தியாளர்களின் சந்திப்பில் பேசியதாவது, தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது என பிரேமலதா கூறியிருப்பதாக கேட்ட கேள்விக்கு, தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக நாங்கள் கூறவில்லை என்று மறுப்பு தெரிவித்ததுடன் தேவையின்றி யார் யாரோ சொல்வதை வைத்து என்னிடம் கேட்க வேண்டாம் என கூறினாா்.

2026 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இருக்குமா? என்ற கேள்விக்கு திமுக மட்டுமே தங்களுக்கு எதிரி, திமுகவை வீழ்த்துவது தான் அதிமுகவின் தலையாய கடமை என்றாா். “எங்களுக்கு ஒரே எதிரி திமுக தான். வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி இல்லை. ஆதிமுக கூட்டணி குறித்து ஆறு மாதம் கழித்து அறிவிக்கப்படும் என்றாா்.
அப்போது அவரிடம் தொடர்ந்து மீனவர்கள் கைது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “இலங்கை கடற்படை கைது செய்வது கண்டிக்கத்தக்கது. நம்முடைய மீனவர்கள் நம்முடைய எல்லைக்குள் தான் மீன்பிடித்து தொழில் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு கடலில் எல்லை எது என தெரியாது. எல்லை கோடும் கிடையாது, அது கடல். நம்முடைய மீனவர்கள் ஒரு சிலர் தெரியாமல் அவர்களின் எல்லைக்குள் சென்று விடுகிறார்கள். எச்சரிக்கை செய்து அவர்களை அனுப்பி வைக்க வேண்டுமே தவிர கைது செய்வது கண்டிக்கத்தக்கது என்றாா்.

மேலும் மீனவர்களுக்கு எல்லை அளவு தெரியாது. அதனால் தான் இந்த பிரச்சனை வருகிறது. இந்திய அரசும் இலங்கை அரசும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். 5 அடி, 10 அடி போனால் உடனே கைது செய்து படகுகளையும் பறித்து சென்று விடுகிறார்கள். உடைமைகளை பறித்து செல்கிறார்கள்.

தொடர்ந்து இலங்கை அரசின் அத்துமீறல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து இலங்கை கடற்படை மீனவர்கள் கைது செய்யப்படுவது, துன்புறுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதற்கான தீர்வை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும்”. என கேட்டுக்கொண்டுள்ளாா்.

வாரிசு அரசியலே திராவிடக் கொள்கையின் பலம்… திமுக கூட்டணியை அசைக்க முடியாது- கி.வீரமணி

MUST READ