Homeசெய்திகள்அரசியல்எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் - திருமாவளவன்

எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் – திருமாவளவன்

-

- Advertisement -

நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்‌.. எதை எந்த நேரத்தில் எப்படி கையாள வேண்டும் என எங்களுக்கு தெரியும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் - திருமாவளவன்

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்;எங்களுக்கு எந்த பேராசையும் இல்லை. எங்கு சென்றால் எதை அல்லலாமல்  என்ற ஆசை இல்லை  100 விழுக்காடு அம்பேத்கரை பின்பற்றக்கூடியவர்கள் நாங்கள். அதிகாரம் எதற்கு பயன்படுவது என்பது தான் முக்கியம். அதிகாரத்தின் மூலம் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது முக்கியமானது.

இந்த தெளிவு இல்லாமல் விசிக இல்லை. திருமா தடுமாறுகிறார் என்று சொல்பவர்களுக்காக நான் இதை சொல்லவில்லை. நம்மை பொருளாதார ரீதியாக அவர்கள் குறைத்து மதிப்பிடலாம் இன்னும் சொல்லப்போனால் நம்மை அரசியல் ரீதியாகவும் கூட குறைத்து மதிபமதிப்பிடலாம் ஆனால் நம்முடைய சுய மரியாதை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது.

எங்கள் கருத்தின் உறுதிப்பாட்டை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது அதை மதிப்பீடு செய்யக்கூடிய அளவுக்கு தகுதி பெற்றவர்கள் தமிழகத்தில் இல்லை. நாங்கள் எங்கள் கருத்தில் தெளிவோடு இருக்கிறோம் ,துணிவோடு இருக்கிறோம் ,உறுதியோடு இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு முறையும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை இல்லை.

ரஜினியை கட்சி ஆரம்பிக்க சொன்னவர்கள் தான் விஜய் கட்சிக்கு பின்னணியில் இருக்கிறார்கள் – ரவிக்குமார் எம்.பி

MUST READ