நாம் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பாரதத்தில் பிரிவினை உருவாக்க, நல்லிணக்கத்தை கெடுக்க, குறுகிய சுய லாபத்திற்காக, ஜாதி மதம், மொழி என பிளவுபடுத்த தற்போது பல கருத்துகள் பரவுகிறது. ஜாதி, மதம், மொழி என்ற பிரிவினைகளை நாம் கடக்க வேண்டும்.
ஒரு மீனில் உள்ள செதில்கள் ஒன்று போல் மற்றொன்று இல்லை.. அதற்காக மீனின் ஒவ்வொரு செதிலையும் பிரித்தால் மீன் இருக்காது. அது போல ஜாதி, மதம், மொழி என இந்த நாட்டை பிரித்தால் இந்த நாடு இருக்காது.
இது நம் நாட்டிற்கு மட்டும் அல்ல.. அனைவருக்கும் பொருந்தும். நாம் இந்த உலகின் மனிதத்தை காக்கா வேண்டும். அனைத்து உயிர்களையும் பாதுகாக்க வேண்டும் அதுவே நம் கடமை.
இந்த பாதையை நாம் இழந்துவிட்டோம் ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நாம் அதனை மீட்டு வருகிறோம். பாரதம் என்றால் என்ன என்று அறிந்த ஒரு தேசிய தலைமை மூலமாக நாம் இதனை செய்து வருகிறோம்.
10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தியா இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வந்தனர். ஆனால் இன்று பாரதம் பேசினால் உலகம் கவனமாக கேட்கிறது. உலகின் எந்த முடிவுகளும் பாரதம் இல்லாமல் எடுக்கப்படுவதில்லை.
கொரோனா மொத்த உலகையும் பாதித்த போது தடுப்பூசி கண்டுபிடித்த நாடுகள் பணம் சம்பாதிக்கும் வழியாக பார்த்தது. பாரதம் தடுப்பூசி கண்டுபிடித்த போது 150 நாடுகளுக்கு அதனை பகிர்ந்தளித்தது. இது தான் பாரதம்.