Homeசெய்திகள்அரசியல்மக்களைப் பற்றி பேசுவதற்கு குஷ்பூவுக்கு என்ன அருகதை உள்ளது? - காங்கிரஸ் கட்சி வடசென்னை மாவட்ட...

மக்களைப் பற்றி பேசுவதற்கு குஷ்பூவுக்கு என்ன அருகதை உள்ளது? – காங்கிரஸ் கட்சி வடசென்னை மாவட்ட தலைவர் திரவியம்

-

- Advertisement -

இன்று ஒரு கட்சி, நாளைக்கு ஒரு கட்சி, நாளை மறுநாள் ஒரு கட்சி என்று கட்சி மாறும் குஷ்பு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டால்  கட்சிப் பதவியும், மாமன்ற உறுப்பினர் பதவியும் ராஜினாமா செய்ய தயார் என வடசென்னை காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திரவியம் சவால் விடுத்துள்ளார்.

மக்களைப் பற்றி பேசுவதற்கு குஷ்பூவுக்கு என்ன அருகதை உள்ளது? - காங்கிரஸ் கட்சி வடசென்னை மாவட்ட தலைவர் திரவியம்

பெருநகர சென்னை மாநகராட்சி ராயபுரம் ஐந்தாவது மண்டல அலுவலகத்தில் அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கையும், மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராயபுரம் மாநகராட்சி மண்டல அலுவலகம் நுழைவாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திரவியம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ்னர் கண்டன கோஷங்களை எழுப்பினர். அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்காமல் தன்னுடைய சுயலாபத்திற்காக லஞ்சம் பெற்று கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதிப்பதாகவும்,  முறைகேடாக பணி செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்  துப்புரவு பணியாளர்களை தனியார்க்கு தாரை வார்ப்பதை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதனை அடுத்து பேசிய திரவியம், குறைவான ஆடை அணிந்து நடனமாடும் குஷ்பு  மக்களை பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை. முக்கியமான பதவியில் இருக்கும் குஷ்பு அருகதை இல்லாமல் தரம் கெட்ட மக்கள்  என யாரை குறிப்பிடுகிறார்? நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், உங்களைப் பற்றி கொச்சையாக சொல்வது என்றால் அதிகமாக கூறலாம்.

மக்களைப் பற்றி பேசுவதற்கு குஷ்பூவுக்கு என்ன அருகதை உள்ளது? - காங்கிரஸ் கட்சி வடசென்னை மாவட்ட தலைவர் திரவியம்

ஜான் அளவு ஆடை அணிந்து நடனம் ஆடுபவர்கள் தானே நீங்கள்.  தமிழகத்தில் இருந்த தலைவர்கள்  நாட்டுக்காக உழைத்தவர்கள் பெருந்தலைவர் காமராஜர்,  கலைஞர் என ஒவ்வொரு இயக்கத்திலும் தலைவர்களும் வரலாறு எல்லாம் குஷ்புவுக்கு தெரியுமா?  இன்று ஒரு கட்சி நாளைக்கு ஒரு கட்சி நாளை மறுநாள் ஒரு கட்சி என்று கட்சி மாறும் குஷ்பூ  நிலையாக நின்று சட்டமன்ற உறுப்பினராக ஆகியிருக்கிறாயா? பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் என்னுடைய மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என சவால் விட்டுள்ளார்.

பாஜகவில் குற்றப் பின்னணியில் இருப்பவர்களுக்கு தான் பதவி அளித்து வருகிறார்கள். அதில் ஒரு பதவியை குஷ்புக்கு அளித்துள்ளார்கள். பாஜக கட்சியில் தியாகம் செய்த பெண்கள் பெண்கள் இல்லையா?  குஷ்புக்கு தான்  மகளிர் ஆணைய பதவி தர வேண்டுமா? தகுதி இல்லாதவர்களுக்கு மகளிர் ஆணைய பதவி கொடுத்துள்ளார்கள் பாஜக கட்சி என தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி இந்திய அளவில் நானூறு தொகுதிக்கு மேலாக வெற்றி பெறும் தமிழகத்தில் 40க்கு 40 தொகுதிகளை வெற்றி பெற்று  ராகுல் காந்தி பிரதமராக,  திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு க ஸ்டாலின் உறுதுணையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்

MUST READ