அரசுடன் கௌதம் அதானி போட்ட சோலார் திட்ட ஒப்பந்தத்தை ஆந்திர அரசு ரத்து செய்யப்போவதாக கடந்த வாரம் செய்தி வெளியானது. அமெரிக்காவில் அதானி குழுமத்திற்கு எதிராக லஞ்ச புகார்கள் எழுந்துள்ள நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், அதானி குழுமத்தின் 7,000 மெகாவாட் சோலார் திட்டத்தை ஆந்திர அரசாங்கம் தடை செய்தால், அதற்கு ரூ.2,100 கோடி அபராதம், ரூ.1.61 லட்சம் கோடி மின் இழப்பைச் செலுத்த வேண்டியிருக்கும். இந்த முடிவை எடுப்பது அரசுக்கு எளிதானது அல்ல. இது மாநிலத்தின் நிதி நிலையை பாதிக்கலாம்.
மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதானி குழுமத்துடனான 7,000 மெகாவாட் சூரிய சக்தி ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்கிறார். இந்த ஒப்பந்தத்தில் முன்பு ஆட்சியில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டிக்கு அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் மீது ரூ.1,750 கோடி லஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவெடுப்பார்.
அதானி நிறுவனம் ஒரு யூனிட்டுக்கு ரூ.2.49 கட்டணத்தை நிர்ணயித்து உள்ளது. ஆனால், மாநில மின்சாரத் துறையின் ஆவணங்களை ஆய்வு செய்தால், இந்த கட்டணம் பொருந்தவில்லை. அடிப்படை சுங்க வரி மற்றும் ஜிஎஸ்டி என ஒரு யூனிட்டுக்கு ரூ.3.069 ஆக அதிகரிக்கிறது. சென்ட்ரல் டிரான்ஸ்மிஷன் யுடிலிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் மூலம் விதிக்கப்படும் டிரான்ஸ்மிஷன் கட்டணம் 80 பைசாக்கள் அதிகரிக்கின்றன. இதன் மூலம் ஒரு யூனிட் ரூ. 3.869 ஆக இருக்கும். அதாவது 25 ஆண்டுகளுக்கு மாநிலத்தின் மொத்த மின் கட்டணம் ரூ.1.61 லட்சம் கோடியாக இருக்கும்.