Homeசெய்திகள்அரசியல்‘யார் அந்த சார்..? யாராக இருந்தாலும் நடவடிக்கை தேவை- திருமாவளவன்

‘யார் அந்த சார்..? யாராக இருந்தாலும் நடவடிக்கை தேவை- திருமாவளவன்

-

- Advertisement -
kadalkanni

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் ‘யார் அந்த சார்?’ என்று நேர்மையான விசாரணை தேவை என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் இன்றி போராட வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்

குற்றவாளி யாராக இருந்தாலும் நியாயமான புலன் விசாரணை தேவை. குற்றவாளியை பிணையில் வெளியே விடக்கூடாது. சிறையில் வைத்திருந்தே நியாயமான விசாரணை நடத்தி அவருக்கு உரிய தண்டனை தர வேண்டும். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அவ்வப்போது நடந்துள்ள சூழலில் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு வீசிக வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும் அந்த சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது பள்ளி கல்லூரி பல்கலைக்கழக வளாகங்களில் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த வழக்கை பொறுத்தவரை கைதாகி இருப்பவரை தவிர்த்து ஒரு சிலர் குற்றத்தில் ஈடுபட்டிருக்க கூடும் என்று சந்தேகம் இருந்துள்ளது. ஆகையால் அரசு நேர்மையான முறையில் புலன்விசாரணை செய்ய வேண்டும் குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக் கூடாது. சிறையில் வைத்தபடி புலன் விசாரணை செய்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்று தர வேண்டும். யார் அந்த சார்? என்ற கேள்விக்கு நேர்மையான விசாரணை செய்து குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் அனுமதி மறுக்கப்படவில்லை.

இந்த பிரச்சினையை வைத்து அரசியல் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சில போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக நினைக்கிறேன். இருப்பினும் எதிர்க்கட்சிகளில் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்’’ என்றும் திருமாவளவன் வலியுறுத்தி இருக்கிறார்.

MUST READ