”ரங்கராஜ் பாண்டேவை, தினமணி வைத்தியநாதனை, எஸ்.வி.சேகரை திமுக மேடைகளில் பேச வைக்க வேண்டுமா? திமுக தலைவர்களே,அமைச்சர்களே இவ்வளவு ஜனநாயகம் தேவையில்லை” என சுப.வீரபாண்டியன் ஆதங்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கருத்தரங்கத்தில் பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கலந்துகொண்டு பேசியது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து பேசியுள்ள அவர், ”இங்கே ஒரு செய்தியை, என் ஆதங்கத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். திமுகவின் தலைவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் வைக்கிறேன். இவ்வளவு ஜனநாயகம் வேண்டாம். வைத்தியநாதனும், எஸ்.வி.சேகரும், ரங்கராஜ் பாண்டேவும் பேசித்தான் நாம் வெற்றி பெற வேண்டுமா என்ன?
ஆயிரம் முறை இவர்களை அழைத்தாலும் அவர்களுடைய வீட்டில் இருந்து ஒரே ஒரு வாக்குக்கூட, உதய சூரியன் சின்னத்திற்கு வராது. அவர்கள் ஒரு நாளும் நமக்கு வாக்களித்ததில்லை. எந்தத் தேர்தலில் அந்த மூன்று சதவீதம் பேர் நமக்கு வாக்களித்து இருக்கிறார்கள்? அவர்கள் வாக்களித்ததும் இல்லை. வாக்களிக்க போவதுமில்லை, வாக்களிக்க வேண்டியதும் இல்லை.
97 சதவீத மக்கள் அவர்களின் 60க்கும் மேற்பட்ட மக்கள் நமக்குத்தான் என்றைக்கும் இருப்பார்கள். திராவிட இயக்கத்தால் பயன்பெற்ற அவர்கள், இன்றைக்கு மும்மொழிக் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் ஒரு நெருப்பு பரவி இருக்கிறது என்று சொன்னால், அது திமுகவினால்தான். தமிழர்கள் நாகரீகமற்றவர்கள் என்று சொல்கிற துணிச்சல் அங்கே ஒருவருக்கு வந்தது என்றால் அதே நாளில் அவரை திரும்ப வைக்கிற அதை திரும்பி வாங்கிக் கொள்ள வைக்கிற ஆற்றல் திமுகவிற்கு இருக்கிறது. இழந்தது திமுக கழகம் சாத்தித்து இருக்கிறது. சகித்துக் கொண்டிருக்கிறது… சாதிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.