Homeசெய்திகள்அரசியல்மதிமுகவின் சொத்துப்பட்டியல் வெளியிட மாட்டேன் - வைகோ

மதிமுகவின் சொத்துப்பட்டியல் வெளியிட மாட்டேன் – வைகோ

-

மதிமுகவின் சொத்துப்பட்டியல் வெளியிட மாட்டேன் – வைகோ

மதிமுகவின் சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுகவின் சொத்துப்பட்டியல் வெளியிட மாட்டேன் - வைகோ

மதிமுகவின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி தொண்டர்களுடன் கொண்டாடினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில்

மதிமுக வின் 30ஆம் ஆண்டு தொடக்க விழாவை தொண்டர்கள் தங்கள் குடும்ப விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். இனி வருகிற சோதனைகள் அனைத்தையும் முறியடித்து மதிமுக வெற்றி கொடியை நாட்டுவோம் என வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.

காவல்துறையில் காலாவதியான மனிதர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் வந்து குழப்பம் செய்து கொண்டிருக்கிறார் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய வைகோ தமிழக ஆளுநர் பேசுவது உளறல் மேல் உளறலாக உள்ளது. அவர் ஆளுநர் பதவிக்கு தகுதியற்றவர் என்றார்.

மதிமுகவின் சொத்துப்பட்டியல் வெளியிட மாட்டேன் - வைகோ

ஆளுநர் பதவியில் இருக்க ஆர்.என். ரவிக்கு எந்த தகுதியும் இல்லை, அவர் வேண்டுமானால் பிஜேபி, இந்து அமைப்புகளுக்கு பிரதிநிதியாக இருந்துக் கொண்டு பேசலாம் என்றார். இந்தியாவில் இதுவரை எந்த ஆளுணரும் இது போன்ற தவறுகளை செய்தது கிடையாது.

திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி இதுவரை இல்லாத வகையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது என புகழாரம் சூட்டினார்.

மதிமுகவில் சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என திருப்பூர் துரைசாமி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு பதிலளித்த வைகோ, மதிமுக வின் சொத்து குறித்த விவரங்கள் அனைத்தும் ஆடிட்டர் மூலமாக முறையாக தணிக்கை செய்யப்பட்டு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை எந்த கட்சியும் சொத்து பட்டியல் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட வில்லை. மதிமுக மட்டும் ஏன் வெளியிட வேண்டும் எனவும் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

MUST READ