எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாக வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி கிளப்பியுள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் .
அதிமுக நான்கைந்து பிரிவுகளாக கோஷ்டி பூசலில் சிக்கித் தவிக்கிறது. உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்த விவகாரமும் பிரளயத்தைக் கிளப்பி இருக்கிறது. செங்கோட்டையன் ஒருபுறம் போர்க்கொடி தூக்க அதிமுகவில் நடப்பது என்ன மக்கள் குழப்பத்தில் தவிக்கிறார்கள். இந்நிலையில் ஓ.பி.எஸ் முதல் பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றினைய வேண்டும் என மீண்டும் ஒருசேர குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் டி.டி.வி.தினகரன் எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக எனச் சொல்லி பகீர் கிளப்பி இருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில்,”அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நான் திடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன். உறுதியாக 2026 தேர்தலுக்கு முன்பே அது நடக்கும் என எதிர்பார்க்கிறோம். அம்மாவின் கொள்கைகளை அம்மா முன்னேற்றக்கழகம் தொடர்ந்து கொண்டு சென்று கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் அம்மாவின் தொண்டர்கள் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கிறது. மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழ் நாட்டில் அமைப்பதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்வது அவசியம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று நான் சொல்கிறேன். அது எடப்பாடி பழனிசாமி இருக்க வேண்டிய அதிமுகா-வா? அவர் இல்லாத அதிமுகவா? என்பதை அங்குள்ள தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அரசியலில் எல்லாவற்றிற்கும் வாய்ப்புண்டு.
தந்தை பெரியாரைப் பற்றி தவறாகப் பேசுவதற்கு எந்த ஒரு அரசியல்வாதிக்கும் அருகதை கிடையாது.தங்களுடைய சுய விளம்பரத்திற்காக, ஒரு சிலர் அவரைப் பற்றி அவதூறுகளாக பேசி வருகிறார்கள்” என அவர் பேசினார்.