தனியா நின்னா டெபாசிட் வாங்கியிருக்க மாட்டாங்க… – தமிழிசை பேட்டி அளித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த ஓட்டுகள் எல்லாம் திமுகவின் ஓட்டுகள் எனவும் தனித்து நின்றால் செல்வப்பெருந்தகை டெபாசிட் கூட வாங்கமாட்டார் என பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.
நாளை 3 ஆவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதிவியேற்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்லும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மூன்றாவது முறையாக ஒரு பலம் வாய்ந்த பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். அவருக்கு வாழ்த்துக்களை சொல்வதற்காக சென்று கொண்டிருக்கிறேன். பாஜகவை பொறுத்தவரை மாவட்ட தலைவர்கள் முதற்கொண்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுதான் பாஜக கட்சி. கட்சிக்காக உழைப்பவர்கள் அனைவரும் பதவி ஏற்பு விழாவில் கண்டுகளிக்க வேண்டும் என்பதுதான் விருப்பம் என தெரிவித்தார்.
அதிக இடங்கள் வாங்கிய பாஜகவை பார்த்து குறைவான இடங்களை வாங்கிய காங்கிரஸ் பேசி கொண்டிருப்பது அவர்களின் அறியாமையை காட்டுகிறது. சிதம்பரம் சொல்கிறார் கூட்டணி ஆட்சி எல்லாம் நடத்த முடியாது கூட்டணி ஆட்சி நடத்துவது சிரமம் என கூறுகிறார். அவர்களுக்கு கட்சி நடத்துவதே சிரமமாக உள்ளது. காங்கிரசுக்கு அனுபவம் இருக்கிறதா காங்கிரஸின் அனுபவம் வேறு பாஜகவின் அனுபவம் வேறு என தெரிவித்தார்.
தமிழகத்தில் ஸ்டாலின் எப்போதும் இதே தவறை தான் செய்கிறார். எதிரணியில் இருந்து கொண்டு தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டியது எல்லாம் கிடைக்காமல் தமிழக மக்களுக்கு எப்பொழுதும் துரோகம் செய்து கொண்டு சுயநலத்தோடு இருக்ககூடியவர். இம்முறையும் தமிழக மக்களுக்கு எங்களைப் போன்றவர் எல்லாம் தமிழக மக்களுக்காக போராடி இன்னென்ன திட்டங்களை கொண்டு வர வேண்டுமோ அதை எல்லாம் மக்களுக்கு கொண்டு வருவோம் என தெரிவித்தார். மக்களுக்காக நாங்கள் பணியாற்றுகிறோம் என கூறினார்.
பதவியை எதிர்பார்த்து வேலை செய்பவர் அல்ல ஒரு வேட்பாளராக போட்டியிட்டு கட்சியின் சாமானியாக தொண்டனாக இருக்கிறேன். என்னுடைய அரசியல் வாழ்க்கையில் எதையும் எதிர்பார்த்து செய்ததில்லை. கட்சியில் போட்டியிட்டது எனக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கிறேன்.
எப்போதும் சொல்வதைப் போல ஆண்டவனிடம் இருப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள். எவ்வளவு விமர்சனம் இருந்தாலும் எனது கருத்தை கட்சிக்காக நான் பேசிவேன். பாஜகவுடன் சேர்ந்தாலும் தோற்று தான் போக முடியும் என்று சொன்னவர்கள் எல்லாம் பாஜகவை சேர்ந்திருந்தால் வெற்றி பெறுவோம் என நினைக்கிறார்கள்.
பாஜகவால் நிலையான ஆட்சியை தர முடியாது – திருமாவளவன் பேட்டி! (apcnewstamil.com)
ஒரு கட்சி தொண்டனாக நாங்கள் ஒரு இடங்களில் கூட வெல்ல முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். கட்சி அதிகமாக வாக்கு பெற்று இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இடங்கள் கிடைக்கவில்லை என்பது எல்லா தொண்டர்கள் போலவும் எனக்கு வருத்தமாக உள்ளது. எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை ஆனாலும் எந்த பலனும் இல்லாமல் திமுகவுக்கு காங்கிரஸ்க்கும் அதிகம் இடங்கள் கிடைத்து இருக்கிறது.
கூட்டணி பற்றி ஜெயக்குமார் சொன்னாலும் யார் சொல்லி இருந்தாலும் சரி 2026க்கு அதிக நாட்கள் இருக்கிறது. இப்பொழுது கூட்டணி வைக்குற எண்ணம் எங்களுக்கு இல்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்தந்த தேர்தலுக்கு ஒரு வியூகம் அமைக்கப்படும். அந்த வியூகம் என்னவென்றால் அந்த கூட்டணியை பலப்படுத்துவதற்கு எதிரணியை பலவீனப்படுத்துவதற்கு அது வலிமையான கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடும். அது கட்சி மேலிடம் முடிவு செய்யும் எங்களுடைய விருப்பத்தை நாங்கள் கூறுவோம் என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி வாங்கிய ஓட்டுகள் எல்லாம் திமுக உடைய ஓட்டுகள். எனக்கு சிரிப்பாக வருகிறது. நிதிஷ் கூட்டணி ஆட்சி என்று காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஒருவர் கூறுகிறார். பாஜக ஆட்சியைப் பார்த்து 28 ஓட்டு துணிகளை வைத்து போர்வையை போர்த்தி இருக்கும் நபர்கள் ஒழுங்காக இருப்பவர்களை பற்றி குறை கூறுகிறார்கள்.
செல்வப்பெருந்தகை பாஜகுக்கு வந்த ஓட்டு எல்லாம் பாமகவின் ஓட்டு என்று கூறுகிறார் என்றால் காங்கிரசுக்கு வந்த ஓட்டு எல்லாம் திமுக உடைய ஓட்டு. இதை ஸ்டாலின் மறுப்பாரா என்று நான் கேட்கிறேன். அப்படி என்றால் தனியாக நின்று இருக்க வேண்டியதுதானே என தெரிவித்தார்.
செல்வப்பெருந்தகை தனியாக நின்றால் எந்த இடத்திலும் டெபாசிட் வாங்க மாட்டார். ஆக அப்படி ஒரு கட்சியை வைத்துக்கொண்டு திமுக தோலில் ஏறிக்கொண்டு இன்றைக்கு பாஜகவை விமர்சனம் செய்ய எந்த தார்மீக உரிமையும் கிடையாது என கூறினார். திமுகவால் தான் காங்கிரஸ் கட்சி ஜெயித்தது, திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு 28 பிட்டு துணியை வைத்துக்கொண்டு எங்களை குறை கூறுகிறார்கள்.
நாங்கள் எப்போதும் பலமாக இருக்கிறோம். தனியாக நின்று பரிசோதனை செய்யும் அளவிற்கு எங்களுக்கும் துணிச்சல் உள்ளது. நீங்கள் காமராஜர் ஆட்சி கொண்டு வருவோம் என கூறுவார்கள். இளங்கோவன் ஏற்கனவே காமராஜர் ஆட்சியில் தான் இருக்கிறது என்று கூறுவார். இப்படியே போய்க் கொண்டிருக்கிறது காங்கிரஸ் என விமர்சனம் செய்தார்.
மகிழ்ச்சியாக உள்ளது தமிழகத்தில் இடங்கள் பெறவில்லை என்றாலும் தமிழகத்தின் பாஜக செயல்பாடை அவ்வளவு பெரிய கூட்டத்தில் அங்கீகாரம் கொடுத்ததற்கு பாரத பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.