Homeசெய்திகள்ஆவின் பாலின் தரம் - அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

ஆவின் பாலின் தரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

-

- Advertisement -

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில்  செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது:

ஆவின் பாலின் தரம் - அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

ஆவின் பாலில் கொழுப்பு திருடப்படுவதாக பொய்யான குற்றச்சாட்டு முன் வைக்கப்படுவதாகவும் அவ்வாறு குற்றம் சாட்டுபவர்களுக்கு  இது தொடர்பான விவகாரங்கள் தெரியாது எனவும் கூறினார்.

கொழுப்பு, புரதம் ஆகியவற்றின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு நான்கு விதமான பாக்கெட் பால்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் தற்போது சிலர் கொழுப்பு குறைந்த அளவு கொண்ட பால் கேட்பதாகவும் அதன் அடிப்படையில் அதற்கு ஏற்ப பாக்கெட் பால்கள் விற்கப்படுவதாக தெரிவித்தார்.

ஆவின் பாலின் தரம் - அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

பச்சை பாக்கெட் பாலின் தேவை குறைந்துள்ள நிலையில், டிலைட் பால் அதிகம் தேவைப்படுவதால் டிலைட் அதிக அளவில் விற்கப்படுவதாக  சென்னையில் பால் விற்பனை அளவில் 15 லட்சத்திலிருந்து குறையவில்லை என்றும் அதேபோல் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு 30 லட்சத்தில் இருந்து குறையவில்லை எனவும் கூறினார். ஆவின் மயக்க நிலையில் இருப்பதாக கூறுபவர்கள் தான் மயக்க நிலையில் இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

அதிமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்படும் பாலில் தரத்திற்கு விலை தர வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கேட்ட பொழுது அவ்வாறு அந்த ஆட்சியில் வழங்கவில்லை எனவும் தற்போது தரத்திற்கு ஏற்ப விலை வழங்குவதால் பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளதாகவும்,  கடந்த ஆட்சியில் பாலுக்கான தொகையை இரண்டு மூன்று மாதங்கள் தாண்டி வழங்கிய நிலையில் தற்போது பத்து நாட்களில் வழங்கப்படுவதாகவும் கூறினார்.

ஆவின் பாலின் தரம் - அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

மேலும், ரோலக்ஸ் வாட்ச் கட்டிக் கொண்டு ஆடு மேய்க்கும் கதை பேசுபவர்களுக்கு ஆவின் குறித்து எதுவும் தெரியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக குற்றம் சாட்டினார்.

தங்களது அடுத்த இலக்காக பொருளாதாரத்தில் நிலைத்த தன்மையுடைய கூட்டுறவு சங்கங்களின் உருவாக்கும் நோக்கத்தில் பயிற்சியை துவக்கி உள்ளதாகவும் ஏற்கனவே வழங்கப்பட்ட தீவனத்தை விட தற்போது தரமான தீவனம் வழங்கப்படுவதாகவும் கூறினார்.

ஆவின் பாலின் தரம் - அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

தீபாவளிக்கு எந்த வித குற்றச்சாட்டும் இல்லாத அளவில் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், ஆவின் சிறப்பாக செயல்படுவதால் வடநாட்டு அலுவலகம் தமிழகத்திற்கு நுழைய முடியாததால் அந்த நிறுவனங்களின் கைக்கூலிகள் ஆவின் மீது குற்றம் சாட்டுவதாக கூறினார். ஆவினுக்கு பாட்டில் கிடையாது எனவும் பாட்டிலில் உள்ள ஆவின் பாலை ஆய்வகத்தின் பரிசோதனை செய்ததாக கூறுவது பொய் என்றார்.

ஆவின் பாலின் தரம் - அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

ஆவின் குறித்து கூறப்படும் பொய் பிரச்சாரத்தை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் ஒவ்வொரு முறையும் தரக்கட்டுப்பாட்டு சோதனை முடித்து தான் வெளியே வருவதாகவும் அதில் எவ்வித சமரசமும் கிடையாது எனவும் கூறினார்.

டிலைட் பாக்கெட்டின் விற்பனையை அதிகரித்து மேஜிக் பாக்கெட் விற்பனையை குறைப்பது உண்மைதான் எனவும் ஆரோக்கியத்திற்கான தரத்தை பார்த்து தான் இந்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கூறினார். பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவில் கொள்முதல் செய்து உள்ளூரில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக முழுவதும் 30 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கூட்டுறவு சங்கம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். கோவில் முகவர் என்ற பெயரில் ஆவணுக்கு எதிராக பேசும் நபர் மாவில் முகவர் இல்லை எனவும் அப்படிப்பட்ட நபர் மோசடி நபர் என்பதால் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை எனவும் கூறினார்.

ஆவின் வாடிக்கையாளர்கள் யாரும் வேறு பால் வாங்கும் அளவுக்கு செல்லவில்லை எனவும் ஆவின் பால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள கடை கோடி மக்கள் கூட விரும்பும் வகையில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது எனவும் இந்த நிறுவனத்தை தகர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுபவர்கள் வடநாட்டு நிறுவனங்களின் கைக்கூலிகள் என குற்றஞ்சாட்டினார். ஆவின் தமிழகத்தில் செயல்படுவதால் தான் பால் உற்பத்தியாளர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதாகவும் வருடம் முழுவதும் சீரான விலை கிடைப்பதாகவும் கூறிய அவர் வட இந்திய நிறுவனங்களை கொண்டு வந்து விடுவோம் என கூறிய கைக்கூலிகள் ஆவின் மீது தவறான குற்றச்சாட்டுவதாகவும் வரும் மூன்று மாதங்களில் ஆவின் நிறுவனம் எது எந்தவித குற்றச்சாட்டும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி காணப்படும்” எனவும் கூறினார்.

MUST READ