Homeசெய்திகள்கேள்வி & பதில்பிரதமர் மோடிக்கு குடும்பம் இருகிறதா? இல்லையா?

பிரதமர் மோடிக்கு குடும்பம் இருகிறதா? இல்லையா?

-

பிரதமர் மோடிக்கு குடும்பம் இருகிறதா? இல்லையா?
என்.கே.மூர்த்தி பதில்கள்

ராமசாமி – கொளத்தூர்
கேள்வி – 2024 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஓட்டு போடனும்? உங்கள் ஆலோசனை என்ன?

2024 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஓட்டு போடனும்? உங்கள் ஆலோசனை என்ன?

பதில்: அய்யா, உங்களை எனக்கு நீண்ட ஆண்டுகளாக தெரியும். மக்களுக்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு நான் மேதாவி அல்ல. ஆனால் நீங்கள் ஒருமுறை என்னிடம் பேசும் போது ஒரு கதையை சொன்னீர்கள். அதே கதையை மீண்டும் நினைவு படுத்துகிறேன்.

பசியோடு இருந்த ஒரு சிங்கம், நரியிடம் சொன்னது, எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா; இல்லையெனில் நேரம் ஆக ஆக உன்னை அடித்து சாப்பிட்டு விடுவேன் என்று மிரட்டியது.

தந்திரக்கார நரி ஒரு கழுதையிடம் சென்று, நம்ம சிங்கம் உன்னை காட்டுக்கு ராஜாவாக முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது. நல்ல நேரம் வரப்போகிறுது வா… போய் சிங்கத்தை சந்திப்போம் என்றது.

நரியின் பேச்சை நம்பி கழுதையும் சென்றது.

கழுதையைக் கண்டதும் பசியில் இருந்த சிங்கம் அதனைத் தாக்கியது. அதனால் காதுகள் அறுபட்டு காயத்துடன் கழுதை தப்பித்தது.

கழுதை நரியிடம் சொன்னது, நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது தெரியுமா?

அதற்கு நரி, சேச்சே, உன் தலையில் கிரீடம் சூட்டவே, சிங்கம் உன் காதுகளை அகற்றியது. அது தெரியாமல் நீ ஓடி வந்து விட்டாய். வா.. மீண்டும் செல்வோம். நமக்கு கிரீடம் வேண்டும்.

நரி சொன்ன வார்த்தை கழுதைக்கு சரி எனப்பட்டது. மீண்டும் திரும்பிச் சிங்கத்திடம் சென்றது.

கொலை பசியுடன் இருந்த சிங்கம் மீண்டும் கழுதையைத் தாக்கியது. இப்பொழுது அதன் வாலை கடித்து அறுத்தது!

கழுதை மீண்டும் தப்பித்து சென்று நரியிடம் சொன்னது. நீ பொய் சொல்கிறாய், இதோ பார், சிங்கம் என் வாலை கடித்து அறுத்துவிட்டது.

அதற்கு நரி சொன்னது, நீ அரியாசனத்தில் வசதியாக அமரவேண்டும் என்பதற்காகவே சிங்கம் உன் வாலை அகற்றியது. அது தெரியாமல் நீ புலம்புகிறாய். மீண்டும் சென்று சிங்கத்தை சந்திப்போம் என்று கழுதையை கையோடு அழைத்து சென்றது. நமக்கு அரியாசனம் முக்கியம் !

இந்த முறை, சிங்கம் கழுதையைப் பிடித்து அடித்து கொன்றது.
சிங்கம் நரியிடம் சொன்னது, பலே பலே, எப்படி சிக்கி சீரழிந்தாலும், திரும்ப கழுதையை அழைத்து வந்துவிட்டாயே, உன்னை பாராட்டுகிறேன். போ… போய் கழுதையின் தோலை உரித்து, அதன் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தைக் கொண்டு வா என்றது.

நரி கழுதையின் தோலை உரித்து, முதலில் அதன் மூளையை சாப்பிட்டது. கழுதையின் நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தை சிங்கத்திற்கு கொடுத்தது.
சிங்கம் கோபத்துடன் கேட்டது, கழுதையின் மூளை எங்கே?
அதற்கு நரி பதிலளித்தது, அந்த கழுதைக்கு மூளையே இல்லை அரசே. மூளை இருந்திருந்தால், காதையும், வாலையும் இழந்த பின்னர் உங்களை நம்பி மூன்றாவது முறையும் வந்திருக்குமா?

(மூன்றாவது முறையாக ஏமாறும் கழுதைகளாக நாம் இருக்கவேண்டாம் என்று எச்சரிப்பதற்காக பலநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பஞ்சதந்திரக் கதை என்று நீங்கள் கூறிய கதை இது).

நரேன் – பூவிருந்தவல்லி
கேள்வி – எனக்கென்று குடும்பமே இல்லை என்கிறாரே பிரதமர் மோடி?

எனக்கென்று குடும்பமே இல்லை என்கிறாரே பிரதமர் மோடி

பதில் : அமலாக்கத் துறைமோடியோட சித்தப்பா! இன்கம் டேக்ஸ்மோடியோட பெரியப்பா!  சி பி ஐமோடியோட தாய் மாமன் ! என் ஐ ஏமோடியோட தம்பி ! தேர்தல் ஆணையம்மோடியோட சித்தப்பா மகன் ! NHRCமோடியோட சித்தி மகன்! SBIமோடியோட இரகசிய சினேகிதி!

இவர்கள் தான் மோடியோட உண்மையான குடும்பம்!

குணா- கிண்டி
கேள்வி- தேர்தல் பத்திர வழக்கு விசாரணையில் SBI வங்கி ஐந்து மாதக் காலம் அவகாசம் கேட்டு இருக்கிறதே?

தேர்தல் பத்திர வழக்கு விசாரணையில் SBI வங்கி ஐந்து மாதக் காலம் அவகாசம் கேட்டு இருக்கிறதே?

பதில் : ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நாடு முழுவதும் 48 கோடி பேர் கணக்குகள் வைத்திருக்கிறார்கள், சுமார் 23,000 கிளைகள் இருக்கிறது. 66,000 ATM இயந்திரங்கள் கொண்ட எஸ்பிஐ வங்கிக்கு, 22,217 தேர்தல் பத்திர கணக்குகளை தருவதற்கு 136 நாட்கள் தேவையா? இதுதான் டிஜிட்டல் இந்தியாவா?

தம்பிராஜ் – விழுப்புரம்
கேள்வி – ஹலோ மூர்த்தி சார், ஒரு வேளை ஓட்டு மிஷினில் தில்லுமுல்லு செய்து பிஜேபி வெற்றி பெற்று விட்டால் என்ன செய்வது?

ஒரு வேளை ஓட்டு மிஷினில் தில்லுமுல்லு செய்து பிஜேபி வெற்றி பெற்று விட்டால் என்ன செய்வது?

பதில்: உங்களுடைய கவலை எனக்கு புரிகிறது. நீங்கள் கவலைப்படும் அளவிற்கு தமிழ்நாட்டில் நடைபெறாது. அப்படி ஒரு சம்பவம் நடந்தால் முதலில் நாம் என்ன செய்வோம்? என்ன செய்ய வேண்டும் ? அந்த சூழ்நிலையில் நம்முடைய மனநிலை என்னவாக இருக்கும் என்பதை கவனமாக சிந்தியுங்கள்.

மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, EVM இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து பிஜேபி வெற்றி பெற்றதாக தெரியவந்தால் நாடு கலவர பூமியாக மாறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். வட மாநில மக்கள் முட்டாள்கள் இல்லை. கடந்த பத்தாண்டுகளில் வறுமை, வேலையில்லா திண்டாட்டத்தை அனுபவித்த அவர்களும் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள்.

லெனின் – கடலூர்
கேள்வி – அய்யா வைகுண்டர் சனாதனத்திற்கு ஆதரவாளர் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளாரே?

அய்யா வைகுண்டர் சனாதனத்திற்கு ஆதரவாளர் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளாரே?

பதில் : ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் வேலையை மட்டும் பார்ப்பதில்லை. மற்ற அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். முதலில் திருவள்ளுவருக்கு காவியை கட்டி, பூணூலை மாட்டி எங்க ஆள் என்றார், பின்னர் வள்ளலாரை கையில் எடுத்து பார்த்தார். வள்ளலார், விக்ரஹம் ஆராதனை இருந்தால் தான் பூசாரி வேண்டும், பூசாரி இருந்தால் அதன் வழியாக சாதி வருகிறது. அதனால் அந்த வழிபாட்டு முறையை ஒழித்து ஜோதி வழிபாட்டைக் கொண்டு வந்தார். அதனால் அதுவும் எடுபடவில்லை.

இப்போது அய்யா வைகுண்டர் சனாதனவாதி என்று பேசத் தொடங்கியுள்ளார்.
தற்போது வைகுண்டரை தன் வசப்படுத்தி பேசுவதன் மூலம் தென் பகுதியில் ஏதேனும் வாய்ப்பு இருக்குமா என பாஜகவினர் ஆழம் பார்க்கிறார்கள். நாடார் குல மக்கள் 19 ஆம் நூற்றாண்டு காலத்திலேயே சாதி அடிப்படையில் மிகவும் கீழாக நடத்தப்பட்டார்கள். அப்போது அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. துண்டு இடுப்பில் கட்டிக்கொள்ளலாம், ஆனால் தோல் மேலே போட்டுக்கொள்ளக்கூடாது.

அப்படிப்பட்ட சாதிய அடக்குமுறைகளை எதிர்த்து அய்யா வைகுண்டர் கிளம்பினார். கடவுள் வழிபாட்டு முறைகளை மாற்றி அமைத்தார். முதன்முதலில் சமபந்தி விருந்துகளை கொண்டுவந்தார். தோலில் துண்டு போடக்கூடாது என்ற அடக்குமுறை காலத்தில் தலைப்பாகை கட்டுங்கள் என சொன்னார். இப்போதும் அய்யாவழி வந்தோர், அய்யாவை குருவாக ஏற்றுக்கொண்டவர்கள் எல்லோரும் தலைப்பாகை கட்டுவார்கள். அப்படிப்பட்ட அய்யா வைகுண்டரை சனாதனத்திற்கு ஆதரவாளர் என்று பேசுகிறார்.

ஆளுநர் திட்டமிட்டே இதுபோன்ற சர்ச்சைக்குரிய செய்திகளை பேசி வருகிறார்.

அன்புள்ள APCNEWSTAMIL வாசகர்களுக்கு வணக்கம்.

வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமை கேள்வி- பதில் இடம்பெறுகிறது. இதில் உங்கள் கேள்விகளும் இடம் பெற வேண்டும் என்று ஆசிரியர் குழு விரும்புகிறது.

மேலும், இதில் இடம் பெறுகின்ற கேள்விகளில் முக்கியமான மூன்று கேள்விகள் தேர்வு செய்து அதில் முதல் கேள்விக்கு ரூபாய். 500, இரண்டாவது கேள்விக்கு ரூபாய். 250 மற்றும் மூன்றாவது கேள்விக்கு ரூபாய். 100 பரிசுகள் வழங்கப்படும்.

உங்கள் கேள்விகள் அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண்#. 9176541031

 

MUST READ