Homeசெய்திகள்கேள்வி & பதில்திராவிடச் சிந்து VS ஆரிய சரஸ்வதி

திராவிடச் சிந்து VS ஆரிய சரஸ்வதி

-

- Advertisement -

அறம் மதி

 

ஆரிய சரஸ்வதி: இன்று முதல் இந்த நாகரிகம் சரஸ்வதி நாகரிகம் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படும்.

எங்கிருந்தோ ஒரு குரல்: சரஸ்வதி நாகரிகமா? யார் வீட்டுப் பிள்னைக்கு யார் பெயர் வைப்பது? இப்படித் திருடுவது நாகரிகம் ஆகாது!

சரஸ்வதி: யார் நீர்?

குரல்: என்னையா யார் என்று கேட்கிறாய்? நான்தான் சிந்து.

திராவிடச் சிந்து VS ஆரிய சரஸ்வதி

ஆரிய சரஸ்வதி: உன்னைத்தான் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டு விட்டதே? இந்தியாவிற்கு என்று ஒரு முகம் வேண்டாமா? ஆக என் பெயர் கொண்டே அழைக்க வேண்டும். இதில் என்ன தவறு?

திராவிடச் சிந்து: சரி, நான் இந்தியாவில் காஷ்மீர் பகுதியில் கிளைகளாய் உருவாகி, பஞ்சாப்பை தொட்டு பாகிஸ்தானில் ஓடுகின்றேன். நீ எங்கு ஓடுகின்றாய்?

திராவிடச் சிந்து VS ஆரிய சரஸ்வதி

சரஸ்வதி: ஆய்வு செய்துகொண்டு உள்ளனர். விரைவில் கண்டுவிடுவார்கள். நானோ ஞான நதி. ஞானத்தால் மட்டுமே அறிய முடியும்.

சிந்து: ஞான நதியை பல கோடி செலவுசெய்து மண்ணில் தேடுவானேன்? அதைவிடு, இந்த நாகரிகம் எந்த மக்களுடன் தொடர்புடையது என்பதே கேள்வி நாகரிகத்திற்கும் உனக்கும் என்ன தொடர்பு?

சரஸ்வதி:  நாங்களே தாகரிகத்தில் உயர்த்தவர்கள். உலகிற்கு தாகரிகம் சொல்லிக் கொடுத்தவர்கள்.

சிந்து:  ஆடு மாடு மேய்த்துக்கொண்டு கைபர், போலன் கணவாய் வழியாக 4000 ஆண்டு களுக்கு முன் வந்த நாடோடிக் கூட்டம் என்றுதானே கண்டுபிடிப்புகள் கூறுகின்றது. நிலைக்குடி நாகரிகத்தை தன்னுடையது என்று நாடோடிக் கூட்டம் சொந்தங் கொண்டாடுவதா?

சரஸ்வதி: இது ஐரோப்பியர்களின் சதி. வேதம் அனாதியானது. இந்த நிலத்தில் தோன்றியது. ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்பது உண்மையல்ல.

சிந்து: ஏன் ஆங்கிலேயர்கள் மீது இவ்வளவு கோபம். ஓ… அவர்கள் சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முந்தையது என்ற உண்மையைச் சொல்லிவிட்டார்கள் என்பதாலா?

சரஸ்வதி: இல்லை. அவர்கள் நம் பெருமையைக் குறைக்கிறார்கள். ஆரிய திராவிட என்ற பிரிவு எல்லாம் பொய், நம்மைப் பிரிக்கவே அவ்வாறு சொன்னார்கள்.

சிந்து: இப்ப மட்டும் நாம் என்று கூறுகின்றாய்? எப்படி நாம் ஒன்றாவோம். வேதத்தில் எங்களுக்கு உரிமை உண்டா? என் பிள்ளைகள் யாகம் செய்ய முடியுமா? நாம் எல்லோரும் ஒன்றுதான் என்றால், என் பிள்ளைகளை ஏன் அர்ச்சகர் ஆவதை உன் பிள்ளைகள் தடுக்கின்றனர்? வழியைவிடு! நாங்களும் உள்ளே வருகின்றோம்.

சரஸ்வதி: உன் பிள்ளைகள் சூத்திர மக்கள்.எங்களவா பூசுரர்கள். புனிதமானவர்கள். நீங்கள் பேசும் மொழி நீஷ பாஷை. எங்கள் மொழியே தேவ பாஷையாக்கும். அனாரியர்களுக்கு எடுப்பான மூக்கு ஏது? கறுப்பர்கள் அல்லவா நீங்கள். அழுக்கானவர்களே, குளிக்காமல் கருவறைக்குள் வருவீர்களா?

திராவிடச் சிந்து VS ஆரிய சரஸ்வதி

சிந்து: பெரும் குளியல் அறைகள் கொண்ட இந்த நாகரிகம் எங்களுடையதே! கறுப்பாய் இருப்பதால் அழுக்கானவர் என்பதா? மற்ற மதத்தினரைக்கூட எதிரியாகத்தான் பார்கின்றீர்கள், எங்களைத்தான் இழிவாகப் பார்க் கின்றீர்கள். இவ்வளவு வெறுப்பை வைத்துக் கொண்டுதான் நாம் என்று பேசினாயோ?

சரஸ்வதி: அதற்காக பக்கத்தில் வருவாயா? நாங்கள் புனிதமானவர்கள் இல்லையா? எங்களுக்கு மரியாதை இல்லையா?

சிந்து: நிறுத்து, எழுதா கிழவியே! வீண் கதை எதற்கு! எழுத்து உண்டா உனக்கு? சிந்துவெளியில் கிடைத்த பானைக் கீறல்கள் எழுத்துகள் எங்கிருந்து வந்தன? அவை என் பிள்ளைகளுடையது.

சரஸ்வதி: அந்த எழுத்துகள் இன்னும் படிக்கப்படவில்லை. எப்படி உன் எழுத்தாகும்? திராவிட மொழியின் மூத்த மொழியாம் தமிழுக்கு இலக்கணம் படைத்தருளியதே அகஸ்தியர் தெரியுமா? அவன் என் மகன்!திராவிடச் சிந்து VS ஆரிய சரஸ்வதி

சிந்து: உனக்கே எழுத்தில்லை! இலக்கணமில்லை! அப்படியானால் அகஸ்தியர் ஏன் உன் மொழிக்கு எழுதவில்லை? உன் மகன் என் மொழிக்கு இலக்கணம் படைத்தானாமா? ஒரு மொழிக்கு ஒரு நபர் இலக்கணம் எழுதிக் கொடுக்க முடியுமா? அதன்படி மக்கள் பேசத் தொடங்கினரா? இந்தக் கட்டுக்கதை உலகில் எந்த மொழியிலாவது உண்டா?

சரஸ்வதி: மக்கள் அப்படித்தான் நம்புகின்றார்கள்.

சிந்து: அந்தப் பொய்யை நம்ப வைத்துள்ளீர்கள். இப்போது இந்த நாகரிகத்திற்கு உங்கள் பெயர் வைக்கப் பார்ப்பதைப் போல.

சரஸ்வதி: ஒரு நபர் இலக்கணம் படைத்து அருள முடியாது என்றால், நீயும் உன் மகன் தொல்காப்பியன் இலக்கணம் எழுதினான் என்று கூறுகின்றாய்! அது எப்படி?

சிந்து: எந்த ஒரு மொழிக்கும் தனிநபர் இலக்கணம் எழுதித் தர முடியாது! இலக்கணம் மக்களின் வாய்மொழி வழக்கத்தில் இருந்து இயல்பாய் வருவதே! தொல்காப்பியர் தமிழ் மொழியின் இலக்கணத்தைப் பதிவு செய்தார். படைத்தருளவில்லை.

திராவிடச் சிந்து VS ஆரிய சரஸ்வதி

சரஸ்வதி: இலக்கணத்தை இந்தக் கறுப்பர் பொதுவாக்குகின்றாயா? புரியவில்லை!

சிந்து: உனக்குப் புரியாது விடு. பானை எழுத்தைக்கூட விட்டுவிடு! முதலில் பானை ஏது உனக்கு. யாகத்தில் (தீயில் ) சுட்டு உண்ணும் உன் வேத வாழ்வியலில் பானையின் தேவை ஏது? எங்களைப் போல உழவு செய்து தானியங்கள் சேமிப்பவர்களுக்குத்தான் பானையின் தேவை உண்டு.

பொங்கல் வைக்கும் எங்களுக்கே பானை உரியது. உணவைச் சுட்டு உண்ணும் (யாகம்) சமையல் முறைக்கு எதற்குப் பானை? சிந்து வெளியில் கிடைத்த பானைகள் எங்களுடையது. ஆகவே சிந்துவெளி எங்களுக்கே சொந்தம்.

சரஸ்வதி: உழவுத் தொழில் ஒரு பாவத் தொழில் என்று முன்னோர்கள் கூறி இருப்பதால் என் பிள்ளைகள் அதனைச் செய்வதில்லை.

சிந்து: யாருடைய முன்னோர்? உழைக்காமல் உண்டு கொழுப்பது எப்படி என்று கண்டறிந்த- வர்களின் முன்னோரா?

சரஸ்வதி: ஏன் இப்படி பிரித்துப் பேசுகின்றாய்? ரிஷிகளை இழிவாகப் பேசுகின்றாய்?

சிந்து: யார் நானா? இதுவரை சூத்திரன், நீஷ பாஷை, அனாரியன், மூக்கு இல்லாதவன், கறுப்பன் என்று பேசியது யார்? கறுப்பு என்பது இழிவல்ல; அது புரட்சியின் குறியீடு.

சரஸ்வதி: ஓஹோ.. மகளைத் திருமணம் செய்து கொண்ட அந்தப் பெரியாரின் வழி வந்தவர்கள்தானே உன் மக்கள். நீ அப்படித் தான் பேசுவாய்!

திராவிடச் சிந்து VS ஆரிய சரஸ்வதி

சிந்து: யார் மகளைத் திருமணம் செய்து கொண்டது. ஆமாம், நீ யார்? பிரம்மனுக்கு மகளா? மனைவியா?

சரஸ்வதி: அபச்சாரம்… அபச்சாரம்! மனதைப் புண்படுத்திட்டா! இந்துக்களே கேட்க நாதி இல்லையா?

சிந்து: கலவரம் செய்ய மட்டும் என் பிள்ளைகள் தேவையா? ஓடாதே நில். பிரம்மனுக்கு நீ யார்? அதைச் சொல்! உன் பெயரிலா என் நாகரிகம் அழைக்கப்படவேண்டும்? விடை சொல்.

பெரியாரும் பெண்களும்

MUST READ