Homeசெய்திகள்கேள்வி & பதில்பிரம்மச்சாரி ஆதி சங்கரர் பலான விஷியத்தில் எப்படி பட்டவர்?

பிரம்மச்சாரி ஆதி சங்கரர் பலான விஷியத்தில் எப்படி பட்டவர்?

-

- Advertisement -

என்.கே.மூர்த்தி பதில்கள்

அண்ணாதுரை – சங்கராபுரம்
கேள்வி – மரியாதை இல்லாத இடத்தில் உறவு வைத்துக் கொள்ள கூடாது என்பது சரியா?

பிரம்மச்சாரி ஆதி சங்கரர் பலான விஷியத்தில் எப்படி பட்டவர்?

பதில் – இது மிகவும் ஆழமான, நுட்பமான கேள்வி. கணவனும் மனைவியும் சமமானவர்கள். அவர்கள் இருவருக்கும் இடையே அன்பு இருக்கும். ஒருவர் மீது ஒருவர் அதிகமான பிரியம் வைத்திருப்பார்கள். அங்கே மரியாதை என்ற வார்த்தைக்கு இடமே இருக்காது. அதேபோன்று நல்ல நண்பர்கள், காதலர்கள் இடையே அன்பு இருக்கும், அன்பு அதிகமாக இருக்கும் இடத்தில் மகிழ்ச்சி இருக்கும், ஒழுக்கம் இருக்கும்.

மரியாதை இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது.தவறான எண்ணங்கள் இருக்கும் இடத்தில் மரியாதை குழையும். இருவருக்கும் இடையே உள்ள தவறான எண்ணங்களை மரியாதை என்ற தோற்றத்தின் மூலம் மறைத்துக் கொள்கிறோம். நாம் இருவரும் உள்ளத்தின் அளவில் சமமானவர் என்ற சிந்தனை இருந்தால் வா… போ… என்று பேசிக்கொள்வார்கள். உரிமையோடு வாடா, போடா என்று திட்டிக் கொள்வார்கள். அங்கே மரியாதை தேவைப்படாது.

ஒருவரை ஒருவர் ஆதிக்கம் செலுத்த நினைக்கும்போது, அடக்கி ஆளும் எண்ணம் எழும்போது பொறாமை வரும். ஆசை அதிகரிக்கும். அதை பூசி மழுப்ப பயன்படும் போலியான தோற்றம் தான் மரியாதை. இதை உங்களுடைய உறவுகளோடு பொருத்தி சரி பார்த்துக் கொள்ளவும்.

பெரியசாமி – சென்னை
கேள்வி – ஒரு கஞ்சன் எப்படி இருப்பான்?

கேள்வி - ஒரு கஞ்சன் எப்படி இருப்பான்?

பதில் – ஒருவர் இரவு நேரத்தில் குருவை தேடி சில சந்தேகங்களுடன் சென்றார். இவர் சென்றதும் குரு விளக்கை அணைத்து விட்டு பாடம் நடத்த தொடங்கினார். ஏன் விளக்கை அணைத்தீர்கள் என்று குருவிடம் கேட்டபோது வாய் பேசுகிறது, காது கேட்கிறது, விளக்கு அவசியமில்லை. தேவையற்ற எண்ணெய் செலவை குறைக்க அணைத்தேன் என்றார்.

குரு பாடம் நடத்தி முடித்ததும் மீண்டும் விளக்கை ஏற்ற முயன்றார். அப்போது சிஷியன் குரு ஏற்றிய தீ குச்சியை வேகமாக தடுத்து அணைத்து விட்டார். விளக்கை ஏற்றவிடாமல் ஏன் தடுக்கிறாய் என்று குரு கேட்டார். அப்போது சிஷியன் சொல்கிறார், நான் கட்டியிருந்த வேட்டி அழுக்காகி விடும் என்று இருட்டில் எதற்கு வேட்டி என்று அவிழ்த்து பக்கத்தில் வைத்து விட்டேன். வேட்டியை தேடி கட்டுவதற்குள் நீங்கள் விளக்கை ஏற்றினீர்கள், அதனால் அணைத்தேன் என்றார் சிஷியன். நீ தான் என்னைவிட பெரிய கஞ்சன் என்று சிஷியனை குரு பாராட்டினார். வாழ்க்கையில் சிக்கனமாக இருக்க வேண்டும். ஆனால் கஞ்சனாக இருக்கக் கூடாது.

பால்ராஜ் – ஆவடி
கேள்வி – மதிக்க தகுந்த பெரியோர்கள் எல்லோரும், எப்படியாவது படித்து விடு, படித்தால் தப்பித்துக் கொள்வாய் என்று பயமுறுத்துவதைப் போல் அறிவுரை கூறுகிறார்களே ஏன்?

பிரம்மச்சாரி ஆதி சங்கரர் பலான விஷியத்தில் எப்படி பட்டவர்?

பதில் – இந்த சமுதாயத்தின் கட்டமைப்பு முறைகள் சாதிகளின் பெயர்களிலிலும், மதங்களின் பெயர்களிலும், கடவுளின் பெயர்களிலும் மனிதர்களை பிரித்து கட்டமைத்து வைத்திருக்கிறது.

அதில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வெறுப்பையும், வன்மத்தையும் தூவி கட்டமைக்கப்பட்டுள்ளது. படிக்காமல், சிந்திக்காமல் இருக்கிற எல்லோரும் அந்த சமுதாய சிலந்தி வலைக்குள் சிக்கிக் கொண்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள்.

அன்பு, கருணை, ஒழுங்கு என்று எதுவும் இல்லை. மகிழ்ச்சியே காண முடியாமல் வேதனையிலும், துயரத்திலும் இருக்கிறார்கள். இது ஒரு ஆபத்தான சமுதாய கட்டமைப்பு. இந்த அமைப்பிற்குள் சிக்கிக் கொண்ட மனம், துயரங்களையும், வேதனைகளையும் ஏற்றுக்கொண்டு வாழ பழகிக்கொள்கிறது.

இந்த இன்னல்களில் இருந்து விடுபட, துயரங்களில் இருந்து விடுபட, குழப்பங்களில் இருந்து விடுபட கல்வி மட்டுமே உதவி செய்யும். கல்வியின் செயல்பாடே தனி நபரை விழிப்படைய செய்வதுதான். எனவே படியுங்கள், எப்படியாவது படியுங்கள்! வாழ்க்கையை எளிமையாக அதன் போக்கில் வாழ்வதற்கு படியுங்கள் என்று நானும் ஆலோசனை வழங்குகிறேன்.

சந்திரன் – திருவேலாங்காடு
கேள்வி – அரசியலில் அனுப்பவும் மிக்க தலைவர் ஸ்டாலினா? பழனிச்சாமியா?

ஸ்டாலினா? பழனிச்சாமியா?

பதில் – நூறு சதவீதம் சந்தேகமே வேண்டாம் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின்தான்.

உதாரணத்திற்கு சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம்

திமுக கூட்டணியில் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கூட்டணி அரசாங்கத்தை எதிர்த்து வரும் அக்டோபர் 2ம் தேதி உளுந்தூர்பேட்டையில் மதுவிலக்கு கோரிக்கையை முன் வைத்து மாநாடு நடத்த திட்டமிட்டிருக்கிறது. அந்த மாநாட்டில் மதுவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ளலாம், குறிப்பாக அதிமுக கூட கலந்து கொள்ளலாம் என்று திருமாவளவன் தெரிவித்திருந்தார். உடனே அரசியல் ஆய்வாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் திமுக கூட்டணி அவ்வளவு தான், உடைந்தது என்று ஆரூடம் கூறினார்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து வந்தார், திருமாவளவனை சந்தித்தார். “நீங்கள் நடத்தவுள்ள மாநாடு அரசுக்கு நெருக்கடி தான், ஆனாலும் மதுவிலக்கில் எங்களுக்கும் உடன்பாடு உள்ளது. அதனால் உங்கள் மாநாட்டில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகிய இரண்டு பேர் கலந்து கொள்வார்கள் என்று அறிவித்துவிட்டார்”. இதுதான் அரசியலில் சாணக்கியர் சிந்தனை என்று கூறுவார்கள்.இது கலைஞரின் அணுகுமுறை. அப்படியே முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வெளிப்படுவதை பார்க்க முடிகிறது.

பரத் – அம்பத்தூர்
கேள்வி – பிரம்மச்சாரி ஆதி சங்கரர் பலான விஷியத்தில் தேர்ச்சி பெற்றவரா?

பிரம்மச்சாரி ஆதி சங்கரர் பலான விஷியத்தில் எப்படி பட்டவர்?

பதில்– ஆதி சங்கரர் இந்திய ஆன்மீக மரபில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் என்கிறார்கள்.

அவர் காசிக்கு அடுத்த மிதுலா நோக்கி செல்லும்போது அங்கே மண்டல மிச்சிரர் என்கிற பெரிய தத்துவ ஞானியை சந்திக்கிறார். அவர்கள் இருவருக்கும் இடையே பல நாட்கள் வாதம் நடைபெற்றது. இறுதியில் ஆதி சங்கரர் வெற்றிப் பெற்றிருக்கிறார்.

இந்த தோல்வியை மண்டல மிச்சிரரின் மனைவி பாரதியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பாரதியும் சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்தவள். அவள் ஆதி சங்கரரைப் பார்த்து தாங்கள் என் கணவரை உங்கள் வாதத் திறமையினால் வெற்றி பெற்று விட்டீர்கள். ஆனால் அது முழு வெற்றி கிடையாது. பாதி அளவு வெற்றிப் பெற்ற தாகத்தான் கருத முடியும். ஏனெனில் நான் என் கணவரில் பாதி. எனவே தாங்கள் வாதத்தில் என்னையும் வெற்றிப் பெற்றால் தான் முழு வெற்றியாக கருத முடியும் என்றாள்.

சரியென்று சங்கரர் அவளோடு வாதம் புரிய ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் குடும்பம், காமத்தைப் பற்றி வாதம் நகர்ந்தது. சிறிய வயதில் இருந்தே சன்னியாசியாக வாழ்ந்து வரும் ஆதி சங்கரரால் பாரதியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. தடுமாறினார். கொஞ்சம் அவகாசம் கேட்டு வாதத்தில் இருந்து விலகினார்.

பாரதியும் சரியென்று ஒப்புக் கொண்டு அவகாசம் அளித்தார்.

அதன் பின்னர் ஆதி சங்கரர் தனது ஞானத்தால் ஒரு அரசன் இறந்து கொண்டிருப்பதையும், அந்த அரசனின் இளம் மனைவி அழுதுக் கொண்டிருப்பதையும் அறிந்தார். தனது சீடர்களை அழைத்து தனது உடலை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு இறந்து கொண்டிருந்த அரசனின் உடலுக்குள் புகுந்து விட்டார்.

இறந்த அரசன் பிழைத்துக் கொண்டதை கண்டு அவன் மனைவி மகிழ்ச்சி அடைந்தாள்.

ஆதிசங்கரர் அரசனின் உடலில் இருந்துக் கொண்டு தேவையான விஷியங்களை தெரிந்துக் கொண்டு, மாதக் கணக்கில் கற்க வேண்டியதை கற்றுக் கொண்டு மீண்டும் தன் உடலுக்குள் வந்து சேர்ந்தார். பின்னர் பாரதியுடன் வாதம் செய்தார். இறுதியில் ஆதி சங்கரர் வெற்றிப் பெற்றார். பாரதியும், அவளுடைய கணவர் மண்டல மிச்சிரரும் ஆதி சங்கரரின் சீடர்களாக மாறியதாக கூறப்படுகிறது. பொதுவாக சங்கராச்சாரியார்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வருவது வாடிக்கையானது தான். இப்படித்தான் ஆதி சங்கரர் அந்த விஷியத்தை கற்றுக் கொண்டதாக சொல்கிறார்கள்.

MUST READ