Homeசெய்திகள்கேள்வி & பதில்திமுக ஆட்சி எப்படி செயல்படுகிறது ? என். கே. மூர்த்தி

திமுக ஆட்சி எப்படி செயல்படுகிறது ? என். கே. மூர்த்தி

-

- Advertisement -

என். கே. மூர்த்தியின் பதில்கள்

திமுக ஆட்சி எப்படி செயல்படுகிறது ? என். கே. மூர்த்தி

மதன் – புழல்
கேள்வி – உண்மையை சொல்லுங்கள் திமுக ஆட்சி எப்படி செயல்படுகிறது ?

பதில்நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜனிடம் கேட்டு சொல்கிறேன். அவருதான் இப்போது ஆடியோ வாயிலாக சொல்லி வருகிறார்.

சாரதி- வளசரவாக்கம்
கேள்வி – விக்ரமராஜாவும் அவருடைய மகன் ராஜாவும் 12 மணி நேரம் வேலையை ஆதரித்து பேசிவருகிறார்களே?

பதில் – 8 மணி நேரம் வேலை என்பது லட்சக் கணக்கான தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி, உயிர் தியாகம் செய்து பெறப்பட்ட உரிமை. அதைப்பற்றி விக்ரமராஜா போன்றவர்களுக்கு தெரியாது.


12 மணி நேரம் வேலை பார்க்கும் தொழிலாளியால் அவன் மனைவியிடம் அன்பாக பேச முடியுமா? குழந்தையின் படிப்பை கண்காணிக்க முடியுமா? குடும்பத்தை பார்க்க முடியுமா ? இவற்றை அனைத்தையும் இழந்து போகும் அந்த தொழிலாளி 12 மணி நேரம் வேலை யாருக்காக செய்ய வேண்டும். இந்த திட்டம் சமுதாயத்தில் பேராபததை ஏற்படுத்தும்.

காமராஜ் – ஆவடி
கேள்வி – செல்போனால் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தா ? இல்லையா ?

பதில் – ஒரு காலத்தில் செல்போன்களை நாம் பயன் படுத்தி வந்தோம். இப்போது செல்போன் நம்மை பயன் படுத்திக் கொண்டிருக்கிறது. மிக ஆபத்தான கருவி செல்போன் என்பதை உணராமல் அதை குழந்தைகளிடம் கொடுக்கின்றோம். அந்த குழந்தை வாலிபப் வயதில் மன நோயாளியாக வந்து நிற்கும் போது பெரிதும் வேதனைப் படுவோம்.

கேள்வி- கம்யூனிஸ்டுகள் வர்க்கப் போராட்டம் என்கிறார்களே, அப்படி என்றால் என்ன ?

பதில் – முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் உழைப்பு சுரண்டல் நிகழ்வதை வர்க்கம் என்று அழைக்கின்றனர்.

உழைப்பு சுரண்டலை பற்றி அறிந்து கொண்டால் மனிதனின் ஒட்டுமொத்த சமூக உறவுகளையும் அறிந்து கொள்ள முடியும்.

சார்லி- பட்டரைவாக்கம்

கேள்வி- திமுகவுடன் மதிமுக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து உங்கள் கருத்து ?

பதில் – மதிமுகவில் தற்போது உள்ள தலைவர்கள் எல்லோரும் சோர்வடைந்து விட்டனர். இனிமேலும் அவர்கள் கையிருப்புகளை கரைக்க எவரும் தயாராக இல்லை. அதனால் திமுகவுடன் மதிமுக இணைந்து விடுவதே சரியானது.
மதிமுகவிற்கு தனி கொள்கை இருப்பதாக துரை வைகோ கூறியுள்ளார். அந்த கொள்கையை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

MUST READ