Homeசெய்திகள்கேள்வி & பதில்திமுகவில் ஓபிஎஸ் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

திமுகவில் ஓபிஎஸ் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

-

    என். கே. மூர்த்தி பதில்கள்

திமுகவில் ஓபிஎஸ் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

ராஜேஷ் – திருவள்ளூர்
கேள்வி – திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை குறித்து உங்கள் பார்வை?

பதில் – மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் நெருக்கடியை சமாளித்து இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்ததே பெரும் சாதனைதான். ஒரே நாடு, ஒரே கொள்கை என்று கோஷம் எழுப்பி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வருபவர்களின் எதிர் திசையில் நின்று ஆட்சி நடத்துவது என்பது சாதாரண நிகழ்வு அல்ல. உண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்ட வேண்டும்.

திமுகவில் ஓபிஎஸ் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

போக்குவரத்து துறை, மின்வாரியத்துறையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிவிட்டு புதிய அதிகாரிகளை நியமனம் செய்து, கீழ்மட்டத்தில் என்ன நடக்கிறது? அந்த துறையினால் மக்கள் அடையும் பாதிப்பு குறித்து முதல்வர் தெரிந்துக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

திமுக அரசுக்கு சில அமைச்சர்களின் வாரிசுகளாலும், சில அமைச்சர்களின் வாய் கொழுப்புகளாலும் கெட்டப் பெயர் ஏற்படுகிறது. அதை முதலமைச்சர் கட்டுபடுத்த வேண்டும். மற்றப்படி இந்த அரசு சிறப்பாகவே செயல்படுகிறது.

கமல் – செங்குன்றம்
கேள்வி– ஆணவம் என்றால் என்ன ?

பதில் – வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாதவர்களும், வாழ்க்கையை வாழத் தெரியாதவர்களும் வாழும் வாழ்க்கைக்கு பெயர்தான் ஆணவம்.

மாவீரன் அலெக்சாண்டர் வெறும் 33 ஆண்டுகள் தான் உயிர் வாழ்ந்தான். அவன் வாழ்நாள் முழுவதும் போரிடுவது, மனிதர்களை கொன்று குவிப்பது, நாடுகளை கைப்பற்றுவது. இதுதான் வாழ்க்கையாக கருதி வாழ்ந்தான். அவனுக்கு வாழ்வதற்கான வாய்ப்போ, நேரமோ கிடைக்கவில்லை.

அலெக்சாண்டர் மறைந்து ஊர்வலமாக கொண்டு செல்லும்போது சவப்பெட்டிக்கு வெளியே எனது இரண்டு கைகளும் தொங்கட்டும் என்று கேட்டுக் கொண்டான். இந்த உலகிற்கு நான் வெறும் கையோடுதான் வந்தேன். இந்த உலகில் நான் வெறும் கையோடுதான் வாழ்ந்தேன். மேலும் இந்த உலகில் இருந்து வெறும் கையோடுதான் இறுதியில் செல்கிறேன் என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறினான். அலெக்சாண்டரின் இறுதி ஊர்வலம் அப்படியே நடந்தது. அதனால் வாழும் பொழுது ஆணவத்தைவிட்டு வாழ்வதற்கு பழகுங்கள்.

பூங்கொடி- காமராஜர்நகர்
கேள்வி – செய்யும் தொழிலே தெய்வம் என்கிறார்களே, அப்படியா?

பதில் – செருப்பு தைப்பவரின் மகனாக பிறந்த ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். ஒரு செருப்பு தைப்பவரின் மகன் அமெரிக்கவின் ஜனாதிபதியாக ஆவதா! என்ற ஆணவச் சிந்தனை உயர் குடியில் பிறந்தவர்களுக்கு இருந்தது. மேலும் தாங்கள் மட்டுமே அரசு பதவியில் இருப்பது பிறப்புரிமை என்ற சிந்தனைக் கொண்டவர்கள். அவர்களுக்கு ஆபிரகாம் லிங்கனை சுத்தமாகப் பிடிக்கவில்லை. முதல்நாள் தொடக்க உரையை ஆற்றுவதற்கு சபையில் ஆபிரகாம் லிங்கன் எழுந்து நின்றார். அப்போது இடையில் ஒருவர் எழுந்தார். அவர் மிகவும் பணக்கார உயர்குடியை சேர்ந்தவர். அவர் எழுந்து நின்று, “மிஸ்டர் லிங்கன், உங்களது தந்தை எனது குடும்பத்திற்கு செருப்புகளை செய்து கொடுப்பது வழக்கம் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது” என்று கூறினார். அப்போது அந்த செனட் சபை முழுவதும் சிரித்தது.

திமுகவில் ஓபிஎஸ் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

ஆனால், லிங்கன் முற்றிலும் மாறுப்பட்ட மன உறுதியை கொண்டவர். அய்யா, உங்களது குடும்பத்தினருக்கு எனது தந்தை செருப்புகள் செய்வதை நான் எனது வீட்டில் பார்த்து இருக்கிறேன். மேலும், அவரை போல் செருப்புகளை வேறு யாராலும் செய்ய முடியாது. அவர் ஒரு படைப்பாளி. அவர் செய்யும் செருப்புகள் வெறும் செருப்புகள் அல்ல. அவர் தனது ஆன்மாவையே அதில் ஊற்றி இருப்பார். அவர் செய்த செருப்பில் ஏதாகிலும் குறை இருக்கிறதா? என்று நான் கேட்க விரும்புகிறேன்.

ஏனெனில், எப்படி செருப்புகள் செய்வதென்று எனக்குக் கூட தெரியும். உங்களுக்கு ஏதாகிலும் குறை இருந்தால் என்னிடம் கூறுங்கள், என்னால் உங்களுக்கு வேறு ஒரு ஜோடி செருப்புகளை புதியதாக செய்து கொடுக்க முடியும். ஆனால், எனக்கு தெரிந்த வரையில் எனது தந்தை செய்து கொடுத்த செருப்புகளை யாரும் குறை கூறியது இல்லை. அவர் மிகப்பெரிய அறிவாளி மட்டுமல்ல மிகப்பெரிய படைப்பாளியும் கூட. மேலும், அவர் எனது தந்தை என்று கூறிக் கொள்வதில் மிகவும் பெருமைப் படுகிறேன்” என்று பதில் கூறினார். அந்த செனட் சபை முழுவதும் வாய் அடைத்து போனது. செய்கின்ற வேலை எது என்பது முக்கியமில்லை. அதை உணர்வு பூர்வமாக செய்கிறோமா அல்லது மனதுக்கு பிடிக்காமல் எரிச்சலோடு செய்கிறோமா என்பதுதான் முக்கியம்.

நாகூரான் – ஆவடி
கேள்வி– தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா, இல்லையா ?

பதில்அமைச்சரவை மாற்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் நடந்தது. அப்பொழுது அமைச்சரவையில் புதியதாக உதயநிதி சேர்க்கப்பட்டார். பல அமைச்சர்களுக்கு இலாக்கா மாற்றம் மட்டுமே நடந்தது. தற்போது தலைமை செயலகம் பரபரப்பாக இருக்கிறது. சில அமைச்சர்களின் செயல்பாட்டில் முதலமைச்சருக்கு திருப்தி இல்லை. ஆனாலும் அமைச்சரவை மாற்றம் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.

சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் 125 பேர் மட்டுமே இருக்கிறார்கள். தனி மெஜாரிட்டி 118. வெறும் 7 உறுப்பினர்கள் மட்டுமே கூடுதலாக இருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கினாலும் அந்த நபரை பாஜக தன் பக்கம் இழுத்துக் கொள்ளக்கூடிய ஆபத்து இருப்பதாக திமுக தலைமை கருதுகிறது. அல்லது பதிவி நீக்கினால் அவர் வெளியில் என்ன பேசுவார் என்று தெரியாது. இதுபோன்ற காரணங்களால் அமைச்சரவை மாற்றம் செய்வதற்கு சாத்தியம் இல்லை.

இன்ப சேகர் – கொரட்டூர்
கேள்வி – அதிமுக ஆட்சியல் நடந்த ஊழல் புகார் மீது நடவடிக்கை என்ன ஆனது ?

பதில் – அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை என்று பல்வேறு துறைகளில் கோடி கணக்கில் ஊழல் நடந்ததாக ஆளுநரிடம் அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுகவினர் புகார் தெரிவித்தனர். அப்போது நடந்த கிராம சபை கூட்டங்களில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிமுகவில் ஊழல் செய்த அமைச்சர்கள் எல்லோரும் சிறைக்கு போய்விடுவார்கள் என்று திமுக தலைவர்கள் பேசினார்கள். அது தற்போது என்ன நிலையில் இருக்கிறது என்று மக்கள் கேட்க தொடங்கி விட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதுவரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஒரு எப்.ஐ.ஆர். கூட ஏன் பதிவு செய்யவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். என்ன நடக்கிறது என்று தெரியவில்லை?

சனமுககநாதன் – கோயம்பேடு
கேள்விதேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சரத்பவார் திடீர் விலகல் ஏன் ?

திமுகவில் ஓபிஎஸ் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

பதில் – சரத்பவாருக்கு வயதாகி விட்டது. அவருடைய அரசியல் எதிர்காலம் அவ்வளவுதான் என்று கணித்தது பாஜக. ஆனால், இந்தியவின் அரசியல் சதுரங்க விளையாட்டில் அவரே கதாநாயகனாக இருக்கிறார். பிரதமர் மோடி, எதிர்கட்சி தலைவர் சோனியா காந்தி போன்ற தலைவர்கள் அனைவரும் சரத்பவாரின் அரசியலை பார்த்து அதிர்ந்து போனார்கள். சரத்பவாரின் அண்ணன் மகனை வைத்து அவருடைய அரசியலை முடக்கிவிட பாஜக முயற்சி செய்தது. ஆனால் அந்த சோதனையிலும் அவரே வெற்றிப் பெற்றார். ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், பிரணாய் விஜயன் ஆகிய தலைவர்கள் சரத்பவாரை சமாதானப் படுத்தினர்.அவர் மீண்டும் கட்சியின் பதவியை ஏற்றக் கொண்டு முழுநேரப் பணியை தொடங்கியுள்ளார். அவருடைய அரசியல் சாணக்கிய தனத்தை நாடளுமன்ற தேர்தலில் எல்லோரும் அறிந்து கொள்ளாலம்.

நவீன்- அம்பத்தூர்
கேள்வி – திமுகவில் ஓபிஎஸ் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

திமுகவில் ஓபிஎஸ் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

பதில் – சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. அங்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனை ஓபிஎஸ் சந்தித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பை வைத்து இதுபோன்ற கேள்வி எழுகிறது. நான் அப்படி கருதவில்லை. கடந்த ஆட்சியில் யார் யார் என்னென்ன செய்தார்கள் என்பது ஓபிஎஸ்க்கு முழுமையாக தெரியும். குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்னென்ன செய்தார் என்பது ஓபிஎஸ்க்குத் தான் தெரியும். அதைப் பற்றி சபரீசனிடம் பேசியிருக்கலாம் என்று கருதுகிறேன்.

ரங்கன்- கோயில்பதாகை

கேள்வி- ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளாரே?

பதில் – நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் எது பேசினாலும் அது விவாதமாக மாறிவிடுகிறது. அதனால் அவர் எதுவும் பேசுவதில்லை.

திமுகவில் ஓபிஎஸ் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

ஆந்திராவில் என்.டி. ராமராவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில், சந்திரபாபு நாயுடு தொலை நோக்கு சிந்தனைக் கொண்டவர். அவரால் ஆந்திரா மாநிலம் மற்றும் ஹைதராபாத் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என்று பாராட்டி பேசினார். அதற்கு ஒய் எஸ் ஆர் கட்சியை சேர்ந்தவரும் ஆந்திர மாநில அமைச்சருமான நடிகை ரோஜா, ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நடிகர் ரஜினிக்கு ஆந்திரா அரசியல் எதுவும் தெரியாது என்று கண்டித்துள்ளார். இது பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது.

மகேஷ் – வடபழனி
கேள்வி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலில் ஈடுபடப்போவது உண்மையா ?

பதில்ஜூன் 3 ம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. அன்று சென்னை கிண்டியில் புதியதாக கட்டப்பட்டுள்ள கிங்ஸ் மருத்துவமனையை குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ திறந்து வைக்க உள்ளார். அன்று மாலை கலைஞர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் சில எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். அந்த மேடை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முதல் படியாக அடி எடுத்து கொடுக்கும் என்று திமுக சீனியர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

சார்லஸ் – காந்திநகர்
கேள்வி – கர்நாட்டகா தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

பதில்பாஜக வெற்றி பெறுமா? காங்கிரஸ் வெற்றி பெறுமா? என்பது இருக்கட்டும். பாஜகவிற்கு கொஞ்சம் வீக் என்ற தகவல் கிடைத்ததும் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தோல்வி பயத்தில் இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. பிரதமர் பேசும்போது, காங்கிரஸ் கட்சி தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறு என்கிறார், என்னை கொலை செய்வதற்கு காங்கிரஸ் சதி செய்கிறது என்கிறார், காங்கிரஸ் வளர்ச்சியை தடுக்கிறது என்கிறார், இலவசம் நாட்டின் வளர்ச்சியை கெடுக்கும் என்கிறார், மறுப்பக்கம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வருடம் 3 சிலிண்டர் இலவசம் என்கிறார். இப்படி ஒரு பிரதமரே பேசுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். நமது பிரதமரை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

அன்புள்ள APCNEWTAMIL வாசகர்களுக்கு வணக்கம்.

வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமை கேள்வி- பதில் இடம்பெறுகிறது. இதில் உங்கள் கேள்விகளும் இடம் பெற வேண்டும் என்று ஆசிரியர் குழு விரும்புகிறது.

மேலும், இதில் இடம் பெறுகின்ற கேள்விகளில் முக்கியமான மூன்று கேள்விகள் தேர்வு செய்து அதில் முதல் கேள்விக்கு ரூபாய். 500, இரண்டாவது கேள்விக்கு ரூபாய். 250 மற்றும் மூன்றாவது கேள்விக்கு ரூபாய். 100 பரிசுகள் வழங்கப்படும்.

உங்கள் கேள்விகள் அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண்#. 9176541031

 

MUST READ