நீயா? நானா? நிகழ்ச்சி தொடர்பான புரோமக்களை பார்த்து வலதுசாரி ஆதரவாளர்கள் தான் டெல்லி மூலம் அழுத்தம் கொடுத்து நிகழ்ச்சியை நிறுத்தியுள்ளனர் என்று பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளாளர்.
நீயா? நானா? நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதன் பின்னணி குறித்து பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- மும்மொழி கொள்கையா? இரு மொழி கொள்கையா? என்பது குறித்த நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படாமல் போனதற்கான காரணத்தை நாம் மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளலாம். இது குறித்த பெரிய அளவில் புரிதல் இருக்க வேண்டியதில்லை. நீயா நானா போன்ற பெரிய விவாத நிகழ்ச்சி என்பது 3 மணிநேரம் ஒளிப்பதிவு செய்து, ஒரு மணி நேரம் தான் போடுவார்கள். 2 மணி நேரம் எடிட்டிங்கில் நீக்க வேண்டும். யார் சிறப்பாக பேசியுள்ளார்கள்? யார் கருத்து கத்தி போல பாய்கிறது என்றெல்லாம் பார்ப்பார்கள். பிறகு சிறப்பு விருந்தினரின் கருத்துக்கள். கோபியின் உடல்மொழிகள் என்ன? இப்படி ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து எடிட் செய்வார்கள். அந்த எடிட்டருக்கு வெறுமனே தொழில்நுட்ப அறிவு மட்டும் இருந்தால் போதாது. அரசியல் அறிவும், குறிப்பிட்ட விவாதம் தொடர்பான கணமும் அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். இப்படி இவ்வளவு வேலைகளுக்கு பின்னர் செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியை போடாமல் அவர்கள் நிறுத்தியுள்ளார்கள் என்றால், கண்டிப்பாக அந்த எடிட்டர் அதனை விரும்ப மாட்டார். நெறியாளர் கோபிநாத் அதை விரும்ப மாட்டார். நிகழ்ச்சிக்கு பின்னால் இருந்து அதை உருவாக்க நினைத்த தயாரிப்பாளர்கள். இந்த நிகழ்ச்சியை உருவாக்கிய இயக்குநர் ஆண்டனி என்று இவர்கள் யாருமே இந்த நிகழ்ச்சியை நிறுத்த விரும்ப மாட்டார்கள். அதனால் கண்டிப்பாக ஒரு பெரிய அழுத்தம் வந்திருக்கும். அப்படிப்பட்ட அழுத்தம் என்ன என்றே கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் மிகவும் சோகம்.
ஒரு நிறுவனம் என்பது எங்கள் ஊரில் செயல்படும் ஒரு டிவி, எங்கள் மொழியில் செயல்படும் ஒரு டிவி, தமிழர்களை மூலதனமாக கொண்டு செயல்படும் ஒரு சேனலில் யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை பாருங்கள். ஏனென்றால் விஜய் டிவியின் உரிமையாளர் யார் என்று உங்களுக்கு தெரியாது? அவர் தமிழரா என்று உங்களுக்கு தெரியாது. இந்த நிகழ்ச்சியை ஏதேனும் டிவி நடத்துகிறததா? அல்லது ஏதேனும் நிறுவனம் லீசுக்கு எடுத்து நடத்துகிறதா? என்று தெரியாது. தற்போது நிகழ்ச்சிகைளை டிவி நடத்தாது. டிவி எதாவது ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்துவிடுவார்கள். நன்றாக கவனித்து பார்த்தோம் என்றால் விஜய் டிவிக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் தொடர்பு இருக்காது. அவர்களது ஒப்பந்தப்படி தயாரிப்பு நிறுவனத்தில் தமிழர்கள் உள்ளார்களா? வட இந்தியர்கள் உள்ளார்களா?. தயாரிப்பு நிறுவனத்தில் உள்ளவர்களுக்கும், நீயா நானாவை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும் தமிழர்களுக்கும் தொடர்பே இருக்காது.
இந்த தமிழர்களுக்கும் தயாரிப்பு நிறுவனத்தில் இருப்பவர்கள் யார் என்றே தெரியாது. ஏதோ ஒரு வடஇந்திய நிறுவனம், யாரோ ஒரு வடஇந்தியர் அதன் தலைவராக இருப்பார். அவருக்கு டிஆர்பி ரேட் தான் முக்கியமாகும். நல்ல மார்க்கெட் வந்தால் செய்யுங்கள் என்று ஒப்புதல் தெரிவிப்பார். அதை மட்டும் செய்யக்கூடிய ஒரு நபர். அவர்தான் நிகழ்ச்சி எப்படி வர வேண்டும். எத்தனை மணிக்கு ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். அதை தாண்டி இந்த நிகழ்ச்சியில் பேசப்படும் உள்ளடக்கம் எதுவும் அவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. அப்படி இருக்கையில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மும்மொழி கொள்கையை ஆதரிக்கக்கூடிய ஒரு வலதுசாரி, நிகழ்ச்சி குறித்த புரோமோவை பார்த்து விட்டு இது நமக்கு எதிரானது என்று டெல்லியில் இருக்கும் யாரோ ஒரு வலதுசாரிக்கு சொல்லப்போய், அவர்கள் அழுத்தம் கொடுத்துதான் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனை சொல்வதற்கு மிகப்பெரிய விவாதம் தேவை இல்லை. இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை பாஜககாரர்கள் கொண்டாடுகிறார்கள். நிகழ்ச்சிக்கு எதிராக பேசுகிறார்கள். அப்படி என்றால் வலதுசாரிகள் தான் இந்த நிகழ்ச்சியை நிறுத்த காரணமாக இருந்துள்ளார். என்ன கொடுமை என்றால் ஒரு வலதுசாரி ஒரு நிகழ்ச்சியை எதிர்ப்பதும், திராவிட இயக்கம் ஒரு நிகழ்ச்சியை எதிர்ப்பதையும் அந்தந்த அரசியல் உரிமையாகும். ஆனால் இதில் பாதிக்கப்படப்போவர்கள் தமிழர்கள். ஏனென்றால் இந்த நிகழ்ச்சியை நிறுத்தியவர்கள் யார் என்றே எனக்கே தெரியவில்லை பாருங்கள்.
மொழிக் கொள்கை என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தினால் தமிழ்நாட்டில் இருமொழி கொள்கைக்கு ஆதரவாக தான் பேசுவார்கள். நீயா நானா நிகழ்ச்சியில் அறிவாளிகள் மட்டும்தான் பங்கேற் முடியும். அந்த 2 மணி நேரம் அறிவால் கட்டிப்போட வைப்பது. உணர்வால் அவரை உரையாட வைப்பது. இதுதான் நீயா நானா நிகழ்ச்சி. அப்படி இருக்கையில் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவன் தான் இந்தி படிக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். கணிதம் படித்தாலோ, அறிவியல் படித்தாலோ வாழ்க்கையில் முன்னேறலாம். இந்தி படித்துவிட்டு எப்படி முன்னேற முடியும்?. தமிழ் என்பது என் மொழி. நான் படித்தே ஆக வேண்டும். எனக்கு தெரிந்தே ஆக வேண்டும். அடிப்படையில் ஒருவர் தாய்மொழியில் தான் சிந்திக்க வேண்டும். இந்தி தெரியா விட்டால் ஒரு நஷ்டமும் கிடையாது. ஆங்கிலம் கற்றுக்கொண்டால் அவன் வாழ்க்கை நல்லா இருக்கும். ஜெர்மனி, சீனா போன்ற நாடுகளுக்கு சென்றால் அங்கு அந்த மொழியை கற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். எங்கு சென்றும் பிழைக்க வாய்ப்பு இல்லாத ஒரு மொழியை நான் ஏன் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் அந்த இந்தியை படிக்க வேண்டும் என்று பகுத்தறிவு உள்ள தமிழர்கள் சொல்ல மாட்டார்கள். அது திணிக்கப்பட்டது. மெட்ரிக், சிபிஎஸ்இ பாடத்திட்டங்களில் பெற்றோரின் விருப்பம் கிடையாது. அங்கே இந்தி என்ற ஒன்று உள்ளது படிக்கிறான். அந்த இந்தியை படித்து அவர்களுக்கு ஒன்றும் பெரிய அளவில் அறிவு வளரப்போவதும் இல்லை.

அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதை ஒரு பாடமாக படிக்க வேண்டும் என்றால், அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு செல்லக்கூடாது என்று தடுக்கும் சதிதான் அது. இந்தி பாடத்தை படிக்க வேண்டிய நேரத்தில் அவன் வேறு பாடங்களை கவனம் எடுத்து படித்துவிடுவார்கள். அதனால் இயல்பாகவே இரு மொழி கொள்கைக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு பதற்றம் என்ன என்றால் இங்கு எல்லாருமே தமிழர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறதே. அவர்கள் திமுக அரசியல் செய்வதாக சொல்லி தப்பித்து வருகிறார்கள். இது திமுகவின் கொள்கை என்று சொல்கிறார்கள். ஆனால் இது திமுகவின் கொள்கை அல்ல தமிழர்களின் விருப்பமே இரு மொழி கொள்கைதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.