Homeசெய்திகள்கேள்வி & பதில்ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் திராவிட இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்.கே.மூர்த்தி பதில்கள்

ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் திராவிட இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்.கே.மூர்த்தி பதில்கள்

-

இடைக்கால பட்ஜெட்- மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!
Photo: ANI

அருண்குமார் – சோழவரம்
கேள்வி – ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில் – சமீபத்தில் இந்தியா டுடே பத்திரிகையும் – சி வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து அண்மையில் நடத்திய கணக்கெடுப்பில், நாட்டில் 72 சதவீதம் பேருக்கு வேலை இல்லாத காரணம் ஒரு தீவிரமான பிரச்சினை என்று கூறியுள்ளனர். அதில் 56 சதவீதம் பேர் இது ‘மிகத் தீவிரமான பிரச்சனை’ என்று கூறியுள்ளனர். மேலும் 62 சதவீதம் பேர் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது அன்றாட செலவுகளை நிர்வகிப்பதே இப்போது கடினமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். 55 சதவீதம் பேர் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கையினால் கார்ப்பரேட் முதலாளிகள் மட்டும்தான் பயனடைந்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.

இதைப்பற்றி  ஒன்றிய அரசு கவலைப் பட்டதாக நிதிநிலை அறிக்கையில் தெரியவில்லை.

அதிமுக ஆர்ப்பாட்டம்
அதிமுக ஆர்ப்பாட்டம்

நரேந்திரன் – ஆவடி
கேள்வி – அதிமுக திடீரென்று ஆர்ப்பாட்டம் நடத்த காரணம் என்ன?

பதில் – ஆளும் கட்சியின் நிர்வாகத் திறமையின்மை, ஊழல், சட்டம் ஒழுங்கு சரியில்லை போன்ற காரணங்களை சொல்லி எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்வது வழக்கம்.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் மகனின் வீட்டில் வேலை செய்த பெண்ணிற்கு நீதி கேட்கும் போராட்டத்தை அதிமுக நடத்தி இருப்பது வேடிக்கையாக உள்ளது. அதிமுக ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து இப்போது தான் விழித்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும், திராவிட இயக்கத்திற்கும் என்ன வேறுபாடு?

தங்கராஜ் – அய்யப்பன்தாங்கள்
கேள்வி – ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும், திராவிட இயக்கத்திற்கும் என்ன வேறுபாடு?

பதில் – இந்த கேள்விக்கான பதில் நான் சொல்வதைவிட மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி அவர்கள் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதை அப்படியே படியுங்கள்.

“1925தில் இரண்டு பெரிய இயக்கங்கள் உருவாயின.
ஒன்று ஒரு டாக்டர் உருவாக்கியது. சாதாரண டாக்டர் இல்லை, பிரிட்டிஷ் முறைப்படி படித்து இங்கிலிஷ் மெடிசன் பட்டம் வாங்கிய டாக்டர் ஆரம்பித்த இயக்கம் ஒன்று.
அதிகம் படிக்காத ஒரு சாமானியன் ஆரம்பித்த இயக்கம் இன்னொன்று.

டாக்டர் ஆரம்பித்த இயக்கம், இந்து ராஜியம், இந்து மேலாதிக்கம் பேசியது.
பாமரன் ஆரம்பித்த இயக்கம், “அறிவு விடுதலையே எங்கள் குறிக்கோள்” என்றது.

இதற்கு பல தசாப்தங்களுக்கு பிறகு நான் பிறந்தேன். என் அம்மா ஒரு பக்தி பழம். எங்கள் வீட்டில் அரசியல், சமூகம் குறித்து பெரிதா யாரும் பேசியதில்லை. ஒரு கிளீன் ஸ்லேட் மனதுடன் இருக்கும் எனக்கு இப்போது இரண்டு ஆப்ஷன்கள்:
1) டாக்டர் ஆரம்பித்த இயக்கம், தொடந்து பரவி, பள்ளி பருவம் முதல் மாணவர்களை cultivate செய்து இயக்கத்திற்கு உட்படுத்தியது.
2) பாமரன் ஆரம்பித்த இயக்கம், யாரையும் இயக்க ரீதியாய் cultivate செய்யாமல் மானாவாரியாய் விட்டது.
இந்த இரண்டில் நான் எதை தேர்வு செய்வது?

யார் ஆரம்பித்த இயக்கம் என்பதை விட, ஒரு பெண்ணாக எனக்கு எது survivalளுக்கு fitடான இயக்கம் என்று நான் கூட்டி கழித்து பார்க்கிறேன்.

டாக்டர் ஆரம்பித்த இயக்கம், மத அடிப்படைவாதம் பேசுகிறது.
-இவர்கள் தான் பிளேக் நோயை ஒழிக்க எலிகளை அழிக்க வேண்டும் என்ற போது, எலி விநாயகரின் வாகனம், அதை கொல்லக்கூடாது என்று மருத்துவர்களை தடுத்து, சில மில்லியன் மனிதர்களை காவு கொடுத்தார்கள்!
-இவர்கள் தான் சதி ஏறுவதை ஆதரித்தவர்கள்
– இவர்கள் தான் பாலிய விவாக தடை சட்டத்தை எதிர்த்தவர்கள்
– இவர்கள் தான் தேவதாசி முறையை ஆதரித்தார்கள்
-இவர்கள் தான் பெண்ணின் சொத்துரிமையை எதிர்த்தவர்கள்
-இவர்கள் தான் பெண்ணுக்கு வங்கி கணக்கு கூட இருக்க கூடாது என்றவர்கள்.
-இவர்கள் தான் ஆணுக்கு பெண் அடங்கி போவதே நம் தர்மம் என்றவர்கள்!!

இதற்கு நேரெதிராய் அந்த சாமானியன் ஆரம்பித்த இயக்கம், பெண்ணை ஒரு சரிநிகர் சமானமான பிரஜை என்கிறது. பெண்களுக்கான எல்லா உரிமைக்காகவும் போராடியது. விதவை மறுமணம், கல்வி உரிமை, சொத்துரிமை. பெண்களுக்கான கல்வி கூடம், அபலை இல்லம், அனாதை ஆசிரமம் என்று women friendlyயான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது….

இது இப்படி இருக்க, கொஞ்சமாவது அறிவிருக்கும் பெண் இந்த இரண்டு இயக்கத்தில் எதை தேர்வு செய்வாள்?

டாக்டர் ஹெக்டேவர் ஆரம்பித்த பிற்போக்கான ஆர் எஸ் எஸ் எனும் பெண்ணடிமை அமைப்பா?
அல்லது பெரியார் எனும் பெண்ணியவாதி ஆரம்பித்த முற்போக்கான சுயமரியாதை அமைப்பா?”

இரண்டு இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்ந்து, அறிவை பயன்படுத்தி எது தேவை என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள்.

நாடாளுமன்ற தேர்தல்

சாதிக்பாஷா – மதுராந்தகம்
கேள்வி – வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி எந்த அளவிற்கு சாத்தியம்?

பதில் – நிச்சயமாக வெற்றிபெற முடியாது. ஆனால் அவர்களுக்கான இருப்பை, தன்மானத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதிமுக உயிரோட்டமாக இருப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது.

arvind kejriwal

கவி பித்தன் – திருவள்ளூர்
கேள்வி – ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவாரா?

பதில் – ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று பாஜகவிற்கு சவாலாக இருக்கும் கெஜ்ரிவாலும் கைது செய்யப்படலாம். அடுத்த மூன்று மாதத்தில் இன்னும் பல்வேறு கைது சம்பவங்களும், ஜனநாயக படுகொலைகளும் நடைபெறும். டைம் பாஸ்க்கு பஞ்சமிருக்காது.

 

MUST READ