Homeசெய்திகள்கேள்வி & பதில்திமுக கூட்டணியில் திருமா தொடருவாரா ? விலகிவிடுவாரா? - S.P.லட்சுமனன் நச்பதில்

திமுக கூட்டணியில் திருமா தொடருவாரா ? விலகிவிடுவாரா? – S.P.லட்சுமனன் நச்பதில்

-

தமிழ் நாட்டில் எல்லோருக்குமான தலைவா் அம்பேத்காா் என்னும் நூல் வெளியிட்டு விழாவிற்கு பின்னா் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீதும் அதன் தலைவர் திருமாவளவன் மீதும் கடும் விமர்சனம் எழுந்தது. விசிக வின் துணை பொது செயளாலா் ஆதவ் அர்ஜுன் ஆறு மாத காலம் இடை நீக்கம் செய்யப்பட்டாா். அதன் தொடா்ச்சியாக திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் விலகி விடுவாா் என்று கருத்து பரவியது. ஆனால் கூட்டணியை விட்டு விலக மாட்டேன் என்று திருமாவளவன் பலமுறை சொல்லிவிட்டாா். இருந்தும் தொடர்ந்து அந்த கருத்து பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல ஊடகத்தில் மூத்த பத்திரிக்கையாளா், அரசியல் விமர்சகர் திரு. S.P.லட்சுமனன்  அளித்த பேட்டியை கேள்வி பதிலாக வழங்கி இருக்கிறோம்.திமுக கூட்டணியில் திருமா தொடருவாரா ? விலகிவிடுவாரா? - S.P.லட்சுமனன் நச்பதில்

கேள்வி – ஆதவ் அர்ஜுன் ஆறு மாத காலம் இடை நீக்கம் செய்யப்பட்டது கட்சியினுடைய நன்மதிப்பை பாதிக்கிறது என்ற காரணத்தினால் இந்த இடைநீக்கம் என்ற அறிக்கை ஒன்றை திருமா அவர்கள் வெளியிட்டுள்ளாா் இது குறித்து விசிக தலைவருக்கு நெருக்கடி இருக்கிறதா ?

S.P.லட்சுமனன்  – திருமா காலதாமதமாக செயல்பட்டதிலேயே அவருக்கு நெருக்கடி இருந்தது என்று செல்லலாம். கட்சிக்கு மட்டும் அவர் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கட்சி தலைவர் திருமாவளவன் மீதான நம்பக்த்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுதுகிற வகையில் ஆதவ் அர்ஜுனின் செயல்கள் இருந்தது. கூட்டணிக்குளே இருந்து கொண்டு தலைமை தாங்குகிற ஆட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்தால் அது எப்படி பட்ட நிலைக்கு கொண்டு செல்லும் என்று தெரியாதவா் அல்ல திருமா. ஆனாலும் ஆதவ் அர்ஜுனின் செயல்பாடுகளோ, சிந்தனைகளோ, எல்லோரும் சொல்வது போல் பணம் என்று இல்லாமல். அவரின் உழைப்பும் அவரை இயக்கத்தில் இருந்து இழக்க மனம் இல்லாமல் மௌனம் காத்திருக்க செய்தது என் சொல்லலாம்.

கேள்வி – ஆட்சியில் பங்கு வேண்டும் என்று நாங்கள் இப்போது கேட்கவில்லை என திருமாவளவனே சொல்லியிருக்கிறாா் அதை பற்றி?

S.P.லட்சுமனன்  – ஆட்சியில் பங்கு வேண்டும் என்று திருமாவளவனின் கட்சியினா் பல ஆண்டுகளாக இந்த கருத்தை முன் வைக்கிறாா்கள். தேர்தல் காலத்தில் தொகுதி பங்கீட்டின் சமயத்தில் திருமாவளவனிடம் அழுத்தம் தரவேண்டுமே தவிர ஆதவ் அர்ஜுன் புத்தக வெளியிட்டு விழா மேடையை  பயன் படுத்தி இருக்ககூடாது. அதற்கு இது சரியான நேரமும் அல்ல . திருமாவளவன் முதல்வராக கூடாதா என்று ஆதவ் அர்ஜுன் பேசிய கருத்தை யாரும் எதிர்க்க வில்லை. ஆனால் அதை ஏன் கூட்டணியில் பதவியில் இருக்கும் துணை முதலமைச்சரை ஒப்பிட்டு  விமர்சிக்க வேண்டும்  என்றுதான் கூறுகிறாா்கள்.

கேள்வி –  குருகிய காலக்கட்டத்தில் கட்சியின் தலைமைக்கு அசௌகரியத்தை ஏற்படுதிற அளவிற்கு ஆதவ் அர்ஜுனுக்கு இடம் கொடுத்திருக்கிறாரா திருமா ?

திமுக கூட்டணியில் திருமா தொடருவாரா ? விலகிவிடுவாரா? - S.P.லட்சுமனன் நச்பதில்

S.P.லட்சுமனன் – ஆம்  கட்சியில் அவருக்கான இடத்தை அவரது துணைபொது செயளாலா் பதிவியே அதற்கு சான்று. கட்சியில் ஒருவருக்கு பதவி அளிப்பெதென்பது அது ஓராண்டு காலமா அல்லது இரண்டு மாதமா என்பதை கட்சி தான் தீர்மாணிக வேண்டும். திருமாவின் மௌனம் தான் ஆதவ் அர்ஜுன் இடம் ,பொருள் ,என்று பாராமால் மேடைகளில் கூட்டணி கட்சியை பற்றி பேசியதற்கு காரணம்.

கேள்வி – நூல் வெளியிட்டு விழாவில் விசிக வை  திமுக சாதி கட்சியாகத்தான் பாா்க்கிறது. தலித் தொகுதிகளுக்கு மட்டும் தான் அழைத்து செல்கிறாா்கள். கூட்டணி கட்சி இல்லாமல் உங்களாலும் ஆட்சி அமைக்க முடியாது என ஆதவ் அர்ஜுன் கேள்வி எழுப்பியுள்ளாா்?

S.P.லட்சுமனன் – ஆதவ் அர்ஜுனின் ஆதங்கம் தவறல்ல. ஒடுக்க பட்ட மக்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்துவது என்ற கருத்தை யாரும் குறைசொல்லவில்லை. திமுக அதை மறுக்கவில்லை, ஆனால் புத்தக வெளியிட்டு விழாவில் யார் பிரதான விருந்தினராக வந்துள்ளாா். அப்பொது அந்த கருத்தை வெளியிட்டது தான் தவறு.

கேள்வி – திமுக வை எதிர்க்கும் அளவிற்கு ஆதவ் அர்ஜுனின் இடையில் என்ன நடந்தது?

S.P.லட்சுமனன் – திமுக வை இப்போது எதிர்க்கும் ஆதவ் அர்ஜுனின் ஏன் திமுக கட்சிக்காக தேர்தலில் வேலை செய்தாா். அப்போது தெரியவில்லையா திமுக மன்னர் ஆட்சி செய்யும் என்றும் உதயநிதி இளவரசராகுவாா் என்று. இந்த குடும்ப அரசியலில் ,ஊழல் அரசியலில் ஏன் தொகுதி கேட்டார்? ஸ்டாலினுடன் சைக்லிங் ஏன் சென்றாா்?

கேள்வி – திமுக, விசிக கூட்டணியில் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?

S.P.லட்சுமனன் – திமுக-விசிக வின் கூட்டணியில் ஆதவ் அர்ஜுனினால் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. விசிக நடத்திய மது ஒழிப்பு மாநாட்டிற்கு திமுக விற்கும் நேரடியாக சென்று அழைப்பு விடுத்தாா் திருமாவளவன். ஒரு சில உரசல்களும்  மனஸ்தாபங்களும் ஏற்பட்டதே தவிர மோதல்கள் ஏற்படவில்லை. அதை இருவருமே தவிர்க்க தான் பாா்த்தார்கள். கூட்டணியை உடைக்கும் நோக்கம் அவர்களுக்கு இல்லை.

ஸ்டாலினுடன் சைக்கிளிங் சென்றபோது மன்னராட்சி என தெரியவில்லையா?… ஆதவ் அர்ஜுனாவுக்கு, மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் கேள்வி!

 

 

MUST READ