Homeசெய்திகள்ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ் மறைவு

ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ் மறைவு

-

ராமோஜி குடும்பத்தின் தலைவர் ராமோஜி ராவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ் மறைவு

ராமோஜி ஃபிலிம் சிட்டி நிறுவனரும் திரைப்பட தயாரிப்பாளரும் பிரபல பத்திரிகை அதிபருமான 87 வயது ராமோஜி ராவ் உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.45 மணியளவில் ராமோஜி ராவ் காலமானார்.

இதை அடுத்து ராவின் உடல் மருத்துவமனையில் இருந்து ராமோஜி திரைப்பட நகரத்திற்கு கொண்டுவரப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட திரைப்பட கலைஞர்கள் ராமோஜி ராவ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ் மறைவு

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திரா முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள சந்திரபாபு நாயுடு டெல்லியில் ராமோஜி ராவ் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். ராமோஜி ராவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் திரைப்பட துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ் மறைவு

1936 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி பிறந்த ராமோஜி ராவ் தொழிலதிபர், ஊடகவியலாளர், திரைப்பட தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், தனியார் தொலைக்காட்சி அதிபர், திரைப்பட நகர உரிமையாளர், ஹோட்டல் அதிபர், கல்வியாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆவார்.

ராமோஜி ராவ் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! (apcnewstamil.com)

இவர் உருவாக்கிய ராமோஜி ராவ் திரைப்பட நகரம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ் மறைவு

தெலுங்கு திரை உலகிற்கு அவர் அளித்துள்ள பங்கினை போற்றும் விதத்தில் ஃபிலிம் ஃபேர், நந்தி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ராமோஜி ராவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.

MUST READ