2,000 ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
RBI அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் மே 2023 இல் புழக்கத்தில் இருந்து வந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி முதலில் அறிவித்ததது. 2023ம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது . அதாவது அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. அதேபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் மக்களிடம் புழக்கத்தில் இருந்த *2,000 நோட்டுகள் 98.04% வங்கிக்கு திரும்பிவிட்டதாவும் 2 சதவீதம் அதாவது ரூ.6,970 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வங்கிக்கு திரும்பவில்லை என தெரிவித்துள்ளது.