டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலனியாவின் நிர்வாணப் படங்களை ரஷ்ய அரசு சேனலில் ஒளிபரப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றதற்கு உலக நாடுகள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றன. இந்நிலையில் அதனைச் சிதைக்கும் வகையில் ரஷ்யா சேனல் மெலனியாவின் நிர்வாண புகைப்படங்களை ஒளிபரப்பி உள்ளது.
செவ்வாயன்று 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, மெலனியாவின் புகைப்படங்கள் ரஷ்யா-1 நெட்வொர்க்கில் 60 நிமிடங்களில் காட்டப்பட்டன என்று ரஷ்ய மீடியா மானிட்டர் நிறுவனர் ஜூலியா டேவிஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மெலனியாவின் 2000 ல் GQ என்கிற பத்திரிக்கைக்கு நிர்வாண போட்டோஷூட் நடத்தி இருந்தார். அந்தப் புகைப்படங்களை ஒளிபரப்பி இப்படி இருந்தவர் வெள்ளை மாளிகைக்குத் திரும்பத் தயாராகிவிட்டதாக தொகுப்பாளர் யெவ்ஜெனி போபோவ் கூறி நிகழ்ச்சியைத் தொடங்கினார். “2000 ஆம் ஆண்டில் மெலனியா எப்படி இருந்தார் என்பதை பாருங்கள் எனக் கூறி அவரது நிர்வாணப் புகைப்படங்களை நிகழ்ச்சியாளர் தொகுத்து வழங்கினார்.
ரஷ்ய தொகுப்பாளர் ஒவ்வொரு புகைப்படத்தின் வெளிப்படையான விவரங்களையும் விவரித்தார். “மெலனியாவின் நிர்வாண புகைப்படங்கள் 2000 ஆம் ஆண்டு டிரம்பின் போயிங் 727 விமானத்தில் எடுக்கப்பட்டவை என்று அமெரிக்க சன் செய்தி வெளியிட்டுள்ளது.