Homeசெய்திகள்பிரபாஸை அடுத்து ஜூனியர் என்டிஆருக்கு வில்லன் ஆகும் சைப் அலி கான்!

பிரபாஸை அடுத்து ஜூனியர் என்டிஆருக்கு வில்லன் ஆகும் சைப் அலி கான்!

-

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் பாலிவுட் நடிகர் சைப் அலி கான் இணைந்துள்ளார்.

‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் மீது இந்திய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் ஜூனியர் என்டிஆர், கொரட்டலா சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். ‘ஜனதா கேரேஜ்’ படத்தை அடுத்த மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு ‘என்டிஆர்30’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தில் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் இணைந்துள்ளார். இதனை படக்குழு உறுதி செய்துள்ளது. அவர் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் படப்பிடிப்பில் இணைந்த புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

முதலில், இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க சைஃப் அலிகான் மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அவர் படத்தில் இணைந்துள்ளார். இதற்கிடையில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்திலும் சைப் அலி கான் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ