Homeசெய்திகள்ஆதார் இணைப்பு மூலம் சம்பளம் பட்டுவாடா!

ஆதார் இணைப்பு மூலம் சம்பளம் பட்டுவாடா!

-

- Advertisement -

100 நாள் வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு ஆதார் இணைப்பு மூலம் சம்பளம் பட்டுவாடா அமல்படுத்தப்பட்டுள்ளது.

கிராமப்புற மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த கிராம மக்கள், குளங்களை தூர்வாருதல், கால்வாய் பராமரிப்பு உள்ளிட்ட அரசு சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றனர். இதன் மூலம், நாடு முழுவதும் கோடிக்கணக்கான கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

ஆதார் இணைப்பு மூலம் சம்பளம் பட்டுவாடா!

இந்நிலையில், இத்திட்டத்தின் பயனாளிகள் தங்களின் வேலை திட்ட அட்டையுடன் ஆதார் எண் இணைக்க ஒன்றிய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2022ல் உத்தரவிட்டது. ஆதாரை இணைக்க கடந்த ஆண்டில் 5 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை முடிந்த நிலையில் இனியும் அவகாசம் நீட்டிக்கப்படாது என ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி, புத்தாண்டு தினமான நேற்று முதல் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு ஆதார் இணைப்பு மூலம் சம்பளம் பட்டுவாடா செய்யும் நடைமுறை அம லுக்கு வந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் ஒருநாளாவது வேலை செய்தவர்கள் இத்திட்டத்தின் பயனாளிகளாக கணக்கில் கொள்ளப்படுவார்கள். முந்தைய நடைமுறையில், வேலை செய்யாதவர்கள் பெயரும் எழுதி, அதற்கான சம்பளம் பெறப்பட்டு முறை கேடும் பல நடந்ததாக ஒன்றிய அரசு குற்றம் சாட்டுகிறது. எனவே போலி பணியாளர்களை தடுக்க, ஆதார் மூலம் வேலை திட்ட அட்டை இணைக்கப்பட்டு அதன் மூலம் வங்கி கணக்கு இணைப்பதன் மூலம் முறைகேடுகள் தவிர்க்கப்படும். அதோடு, பணியாளர்களுக்கு சம்பளமும் விரைவாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கூறி உள்ளது.

கடந்த 2022 ஏப்ரலில் ஆதார் இணைப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதற்கட்டமாக 7.6 கோடி பேர் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டனர். நடப்பு நிதியாண்டில் 1.9 கோடி பதிவு செய்த தொழிலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும், இத்திட்டத்தின் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 25.69 கோடியாக இருந்த நிலையில் தற்போது 14.33 கோடி பயனாளிகள் மட்டுமே செயல்பாட்டில் இருப்பதாக ஒன்றிய அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 11.36 கோடி பேர் தகுதியற்றவர்களாக நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ