Homeசெய்திகள்சல்மான் கான் நடிப்பில் உருவாகும் 'டைகர் 3'.... ட்ரைலர் ரிலீஸ் அப்டேட்!

சல்மான் கான் நடிப்பில் உருவாகும் ‘டைகர் 3’…. ட்ரைலர் ரிலீஸ் அப்டேட்!

-

சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் டைகர் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் ‘ஏக் தா டைகர்’ படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சல்மான் கான் டைகர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெரிய அளவில் பேசப்பட்ட டைகர் எனும் பெயரை வைத்து 2017ல் ‘டைகர் ஜிந்தா ஹை’ என்ற படமும் வெளியானது. தற்போது இதன் மூன்றாம் பாகமாக டைகர் 3 திரைப்படம் மணிஷ் ஷர்மா இயக்கத்தில் உருவாகி வருகிறது.இந்த படத்தை யாஷ் ராஜ் ஃபில்ம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதில் சல்மான் கான் உடன் இணைந்து முதல் பாகத்தில் நடித்த கத்ரீனா கைஃப் நடிக்கிறார். வருகின்ற தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி வெளியாக இருப்பதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ