Homeசெய்திகள்சசிகுமார், யோகி பாபு கூட்டணியில் உருவாகும் புதிய படம்.... லேட்டஸ்ட் அப்டேட்!

சசிகுமார், யோகி பாபு கூட்டணியில் உருவாகும் புதிய படம்…. லேட்டஸ்ட் அப்டேட்!

-

நடிகர் சசிகுமார், கடந்த மார்ச் 3ஆம் தேதி வெளியான ‘அயோத்தி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கியிருந்தார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வெளிவந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
அயோத்தி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, சசிகுமார் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் இயக்குனர் ஆர் டி எம் இயக்குகிறார்.
இப்படம் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 11 வது படமாகும்.
இந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து யோகி பாபு, நவீன் சந்திரா மற்றும் பலர் நடிக்கின்றனர்கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ராஜ வம்சம் படத்தில்
சசிகுமார் மற்றும் யோகி பாபு ஏற்கனவே இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

MUST READ