‘விடுதலை’ படத்தில் நடிகை பவானி ஸ்ரீ-யின் நடிப்பை சீமான் பாராட்டியுள்ளார்.
சூரியை கதாநாயகனாக வைத்து வெற்றிமாறன் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் கடந்த மார்ச் 31 ஆம் தேதி வெளியானது. விடுதலை படத்தில் சூரி நல்ல நடிகனாக மிளிர்கிறார்.
விடுதலை படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தில் அவரின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை படத்தை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பவானி ஸ்ரீயின் நடிப்பையும் பாராட்டியுள்ளார்.
“போராளிக் குடும்பத்தின் வழிவந்தவள் என்றாலும் எவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது” என்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் புகழ்பெற்ற சொற்றொடர் போலப் படைக்கப்பட்ட தமிழரசி கதாப்பாத்திரத்திற்குத் தன் கருணை தாங்கிய விழிகளாலும், ஆற்றாமையும் இயலாமையும் வெளிப்படும் நுட்பமான முகப்பாவனைகளாலும் உயிரூட்டியிருக்கிறார் தங்கை பவானி ஸ்ரீ” என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு பதில் அளித்துள்ள பவானி “நன்றி அண்ணா தமிழரசியாக விடுதலையில் என் பங்களிப்புக்கு பிரபஞசன் சார் வார்த்தைகளால் தாங்கள் அளித்த பாராட்டுகள் எனக்கு மேலும் ஊக்கம் தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
நன்றி அண்ணா
தமிழரசியாக விடுதலையில் என் பங்களிப்புக்கு பிரபஞசன் சார் வார்த்தைகளால் தாங்கள் அளித்த பாராட்டுகள் எனக்கு மேலும் ஊக்கம் தருகிறது .🙏🌸🌸 https://t.co/vIrIionoGc— Bhavani sre (@BhavaniSre) April 1, 2023