‘விடுதலை’ படத்திற்கு கிடைத்த அசுர வெற்றியை அடுத்து நடிகர் சூரி இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் மக்கள் ஆதரவை வாரிக் குவித்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், ராஜீவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். வெற்றிமாறன் படம் என்றால் சிறந்த நடிப்பை கொடுத்து தானே ஆகவேண்டும்.
படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவரின் இசை படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது. இசையும் பாடல்களும் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளன.
படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து நேற்று வெற்றிமாறன் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் இருவரும் இளையராஜாவை சந்தித்து பூச்செண்டு கொடுத்து வாழ்த்து பெற்றனர். தற்போது நடிகர் சூரி இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
சற்று நேரமுன்பு..
“இசை”யை சந்தித்து நன்றி கூறினேன்..ஆசி வாங்கினேன்..
இறைவனுக்கு நன்றி! @ilaiyaraaja @rsinfotainment #viduthalai pic.twitter.com/6aVZMQnU64— Actor Soori (@sooriofficial) April 3, 2023
“சற்று நேரமுன்பு.. “இசை”யை சந்தித்து நன்றி கூறினேன்..ஆசி வாங்கினேன்.. இறைவனுக்கு நன்றி! ” என்று தெரிவித்துள்ளார்.
விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.