Homeசெய்திகள்விளையாட்டுஒலிம்பிக் பேட்மிண்டன் - அரையிறுதியில் இந்தியாவின் லக்சயா சென்!

ஒலிம்பிக் பேட்மிண்டன் – அரையிறுதியில் இந்தியாவின் லக்சயா சென்!

-

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென் வெற்றி  பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென், உலக தரவரிசையில் 11 .வது இடத்தில் உள்ள
சீன தைபே வீரர் செள டியன் சென் உடன் மோதினார். விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் லக்சயா சென் 19-21, 21-15, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதன் முலம் ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை பெற்றார்.

MUST READ