டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 60 லீக் போட்டிகள் நடந்துள்ளன. நேற்று 62வது லீக் போட்டி (அதாவது இரண்டாவது போட்டி) நடைபெற்றது. பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 61வது லீக் போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்ஷர் பட்டேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பெங்களூரு அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி 27 ரன்களிலும் பாப் டூ பிளசிஸ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய வில் ஜாக்ஸ் 41 ரன்களிலும் ரஜத் படிதார் 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 187 ரன்கள் எடுத்தது.
பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் 1 ரன்களிலும் ஜாக் பிராஸர் மெகர்க் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அபிஷேக் போரேல் 2 ரன்களிலும் சாய் ஹோப் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக அக்ஷர் பட்டேல் 57 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 19.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. பந்துவீச்சு தரப்பில் கேமரூன் கிரீன் 4 ஓவர்கள் பந்துவீசி 1 விக்கெட் எடுத்து 19 ரன்கள் மட்டுமே கொடுத்தார். பின்னர் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் ஆட்டநாயகனாக கேமரூன் கிரீன் தேர்வு செய்யப்பட்டார்.