ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள் பிரிவில் 10வது சுற்றில் அமெரிக்காவை வீழ்த்தியது இந்திய அணி.
2.5 – 1.5 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.
இந்திய வீரர்கள் குகேஷ், அர்ஜூன் எரிகேசி ஆகியோர் தலா 1 புள்ளிகளும் விதித் குஜராத்தி 0.5 பெற்றனர்.
10-வது சுற்று முடிவில் இந்திய ஆண்கள் அணி 19 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
சீனா 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில் 11-வது சுற்றில் டிரா அல்லது வெற்றி பெற்றால் இந்திய ஆண்கள் அணிக்கு தங்கம் வெல்ல வாய்ப்பு.11-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி ஸ்லோவேனியா அணியை எதிர்கொள்கிறது.