Homeசெய்திகள்விளையாட்டுடி20 உலக கோப்பை தொடர்: ”சூப்பர் 8” சுற்றில் வங்காளதேச அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி!

டி20 உலக கோப்பை தொடர்: ”சூப்பர் 8” சுற்றில் வங்காளதேச அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி!

-

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் பங்காளதேச அணியை ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் விதிமுறைப்படி வெற்றி பெற்றது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற ’சூப்பர் 8’ சுற்றில் 44வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆஸ்திரேலிய அணி மிட்செல் மார்ஷ் தலைமையிலும் வங்காளதேச அணியானது நஜ்மூல் ஹசன் சாண்டோ தலைமையிலும் களம் கண்டன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இன்று காலை இந்திய நேரப்படி) நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து வங்காளதேச அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தன்சிட் ஹசன் ரன் ஏதுமின்றியும் லிட்டன் தாஸ் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய நஜ்முல் ஹசன் சாண்டோ 41 ரன்களிலும் டவுகிட் ஹிரிடாய் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 140 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சு தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபுறம் எதிர்த்தாடிய டேவிட் வார்னர் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்திலிருந்தார். அணியானது 11.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 100 ரன்கள் எடுத்திருந்தது. அந்த நேரம் மழைக் குறுக்கிட்ட காரணத்தினால் ஆஸ்திரேலிய அணி டக்வொர்த் விதிமுறைப்படி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அணியின் ஆட்டநாயகனாக பேட் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

MUST READ