Homeசெய்திகள்விளையாட்டுவினேஷ் போகத் நீர்ச்சத்து குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதி

வினேஷ் போகத் நீர்ச்சத்து குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதி

-

பாரீஸ் ஒலிம்பிக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக பாரீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வினேஷ் போகத் கூடுதல் எடை காரணமாக ஒலிம்பிக் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். முன்னதா அவர் உடல் எடையை குறைக்க இரவு முழுவதும் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டார். இதில் 1.9 கிலோ வரை எடை குறைந்தார். இந்த நிலையில் வினேஷ் போகத்துக்கு நீர்ச்சத்து குறைந்ததால் அவர் பாரிஸ் மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராகுல் காந்தி

இதனிடையே, ஒலிம்பிக் போட்டியலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் சதி இருப்பதாக காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளன. வினேஷ் போகத் வெற்றியை யாரால் ஜீரணிக்க முடியாதோ அவர்கள்தான் சதி செய்திருப்பார்கள் என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இதேபோல், வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுளளார்.

 

 

MUST READ