Homeசெய்திகள்இந்தியா - வங்கதேசம் இடையிலான 2-வது டெஸ்ட்... போதிய வெளிச்சம் இன்மையால் முதல் நாள் ஆட்டம்...

இந்தியா – வங்கதேசம் இடையிலான 2-வது டெஸ்ட்… போதிய வெளிச்சம் இன்மையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு

-

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மையால் பாதிக்கப்பட்டது.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொ ண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தநிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. போட்டியில் உணவு இடைவேளை வரை வங்கதேச அணி 2 விக்கெட்  இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் ஆட்டம் தொடங்கி 9 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை எடுத்திருந்தபோது போதிய வெளிச்சம் இன்மையால், முதல்நாள் போட்டி முடிவுக்கு வந்தது.

வங்கதேசம் அணி வீரர்கள் மொமினுல் 40 ரன்களுடனும், முஷ்பிகுர் ரகிம் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், அஷ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து, நாளை 2ஆம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

MUST READ