Homeசெய்திகள்விளையாட்டுநியூசி.க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி... முதல் இன்னிங்சில் 156 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி

நியூசி.க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி… முதல் இன்னிங்சில் 156 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி

-

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 156 ரன்களுக்கு சுருண்டு ஏமாற்றம் அளித்தது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல்அவுட் ஆனது. அந்த அதிகபட்சமாக தொடக்க வீரர் டெவான் கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும், சுப்மான் கில் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி, நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்  மிட்செல் சான்ட்னரின் துல்லியமான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ரவீந்திர ஜடேஜா மட்டும் சற்று தாக்குபிடித்து 38 ரன்களை சேர்த்தார். 45.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார்.

பின்னர் 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி நிதானமாக ஆடி ரன்களை எடுத்தது. அந்த அணியின் கேப்டன் டாம் லேதம் அபாரமாக ஆடி அரை சதம் அடித்தார். இன்றைய 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. டாம் பிளன்டல் 30 ரன்களுடனும், கிளன் பிலிப்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

நியூசிலாந்து இதுவரை 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. நாளை 3-வது நாள் ஆட்டம் நடை பெற உள்ள நிலையில், நியூசிலாந்தை விரைந்து ஆட்டமிழக்க செய்ய இந்திய அணி போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ