மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில், இந்தியா சார்பாக பங்கேற்று ஐந்து தங்கப்பதக்கங்களை வென்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்!
தியாகமும் சரியான முடிவுகளுக்கும் பாராட்டுகள் என மாதவன் மற்றும் அவர் மனைவியை பாராட்டி ஏ.ஆர் ரகுமான் வாழ்த்தினார்!
நடிகர் மாதவனின் 17வயதுடைய மகன் வேதாந்த் ஒரு நீச்சல் விளையாட்டு வீரர் ஆவார். சமீபகாலமாக இந்தியா சார்பாக அதிக ஈடுபாட்டுடன் பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகிறார்.
இந்நிலையில் மலேசியாவில் 13-ம் தேதி முதல் 15-ம் வரை என மூன்று நாட்கள் நடைபெற்ற (Malaysian invitational age group swimming championships – 2023) நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று (50,100,200,400,1,500 மீட்டர்) 5 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். ஒவ்வொருமுரையும் தனது மகன் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவரை ஊக்கப்படுத்தும் நிலையில் தற்போது வென்றுள்ள இந்தப் போட்டியின் வெற்றிகளையும் பகிர்ந்துள்ளார். பதக்கங்களோடு உள்ள வேதாந்தின் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
Credits to you and your wife for the sacrifice and right decisions taken to nurture him ..God bless🌺 https://t.co/MYp2qrCzdL
— A.R.Rahman (@arrahman) April 16, 2023
இதனை டேக் செய்து வாழ்த்தியுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ”அதற்காவே அற்பணித்து தியாகம் செய்துள்ள உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்”.
இதற்கு முன்பு கடந்த ஆண்டு டேனிஷ் ஓபன் தொடரில் 1500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் மற்றும் 800 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பந்தயத்தில் தங்கப் பதக்கமும், அதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் கேலோ இந்தியா போட்டியில் நீச்சல் பிரிவில் 5 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.