Homeசெய்திகள்விளையாட்டுஆஸ்திரேலியாவை அலறவிட்ட ஆப்கானிஸ்தான் - 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ஆப்கானிஸ்தான் – 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

-

- Advertisement -

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற’சூப்பர் 8’ சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அர்னாஸ் வாலே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. ரமனுல்லா குர்பாஸ் 60 ரன்களிலும் இப்ராஹிம் சட்ரன் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்றவீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 148 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா அணி தொடக்கம் முதலே தடுமாறியது. அந்த அணி 19.2 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 59 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்தது. ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பை வரலாற்றி ஆஸ்திரேலியாவுடன் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.

MUST READ