Homeசெய்திகள்விளையாட்டுடி20 உலகக் கோப்பை முதலாவது அரையிறுதி ஆட்டம் - ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்!

டி20 உலகக் கோப்பை முதலாவது அரையிறுதி ஆட்டம் – ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்!

-

டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றானது சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது சூப்பர் 8 சுற்று முடிவடைந்து இன்று முதலாவது அரையிறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இதில் இன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி மேற்கிந்திய தீவுகளில் பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசியது. தற்போது வரை ஆப்கானிஸ்தான் அணியானது 8 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 38 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

MUST READ