
அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசைப் பட்டியலிலும் இந்திய கிரிக்கெட் அணி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
“லேண்டர், ரோவரில் இருந்து எந்தவித சிக்னலும் பெற முடியவில்லை”- இஸ்ரோ தகவல்!
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. மொஹாலியில் நேற்று (செப்.22) நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது மதச்சார்பற்ற ஜனதா தளம்!
இதனையடுத்து, ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. ஏற்கனவே, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் இருந்தது. இதன்மூலம் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடம் பிடித்த அணி என்ற பெருமையை கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பெற்றிருக்கிறது.