ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றி பெற்றது.
மணிப்பூர் கலவரம்- எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு கடிதம்!
இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாமில் (Birmingham) உள்ள எட்ஜ்பாஸ்டன் (Edgbaston) கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா அணி எதிர்கொண்டது. இதில் இரண்டாவது இன்னிங்சில், இங்கிலாந்து அணி நிர்ணயித்த 281 ரன்கள் இலக்கை 8 விக்கெட்டுகளை இழந்து கடந்தது ஆஸ்திரேலியா அணி.
இதனால் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் அதிகபட்சமாக கவாஜா 65, பாட் கம்மின்ஸ் 44, டேவிட் வார்னர் 36 ரன்களை எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில், ஸ்டூவர்ட் ப்ராட் 3, ராபின்சன் 2, மொயின் அலி, ஜோ ரூட், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசிய அமைச்சர்!
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 393 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 273 ரன்களையும் எடுத்திருந்தது. அதேபோல், ஆஸ்திரேலியா அணி தரப்பில் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 386 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்களையும் எடுத்துள்ளது.