சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. (International Cricket Council- ‘ICC’) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “16ஆவது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2023, வரும் ஆகஸ்ட் 31- ஆம் தேதி தொடங்குகிறது. வரும் செப்டம்பர் 17- ஆம் தேதி வரை நடைபெறும் ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.
சத்யராஜ் நடிப்பில் வெப் சீரிஸ் இயக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்!
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றனர். இந்த ஆறு அணிகளும் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று முடிவில் நான்கு அணிகள் சூப்பர் சுற்றுக்கு தகுதிப் பெறும். ஆசியக் கோப்பையில் மொத்தம் 13 போட்டிகளில் 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், 9 போட்டிகள் இலங்கையிலும் நடக்கும்.
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் உட்பட 9 போட்டிகள் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும். ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி செப்டம்பர் 17- ஆம் தேதி நடக்கவுள்ளது”. இவ்வாறு ஐ.சி.சி. வெளியிட்டிருந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின்- மாரி செல்வராஜ் கூட்டணியின் மாமன்னன் ட்ரைலர் அப்டேட்!
கடந்த ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் நடந்த இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி ஆசியக் கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசியக் கோப்பை பாகிஸ்தானில் நடக்கவிருந்த நிலையில், இந்தியா மறுப்பு தெரிவித்ததால் இலங்கையிலும் போட்டி நடக்கிறது.