ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் 8-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
விரைவில் அறிமுகமாகிறது சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில்! மற்றும் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்
கடந்த ஆகஸ்ட் மாதம் 30- ஆம் தேதி தொடங்கிய 16வது ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடர், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்று ஆட்டங்களின் முடிவில், இந்தியா முதலிடத்தையும், இலங்கை இரண்டாவது இடத்தையும் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
வலுவான அணியாகப் பார்க்கப்பட்ட பாகிஸ்தான் நான்காவது இடத்தையே பிடித்தது. இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், அனைத்து அணிகளும் ஒரு போட்டியிலாவது தோல்வியைத் தழுவியுள்ளனர். இறுதிப் போட்டியை வென்று ஏழு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியும், நடப்பு சாம்பியனும், ஆறு முறை சாம்பியனுமான இலங்கையும் மல்லுக்கட்டுகின்றனர்.
இலங்கை அணியிலும் நல்ல சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால், இந்திய அணியின் வீரர்கள் மிகுந்த பொறுப்புடன் விளையாட வேண்டியது அவசியமாகிறது. அதிகபட்ச ரன்கள் குவிப்பு, அதிகபட்ச விக்கெட் பட்டியலில் தலா இரண்டு இலங்கை அணியின் வீரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
ஐ.ஆர்.எஸ். பிரிவு அதிகாரியான ராகுல் நவீன் நியமனம்!
வங்கதேசம் அணிக்கு எதிராக டக் அவுட் ஆன இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இறுதிப்போட்டியில் கவனமாக ஆட வேண்டும். ஓய்வில் இருந்த விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் அணிக்கு திரும்புவது கூடுதல் பலமாகும். இறுதிப் போட்டியில் நடைபெறவுள்ள கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மழையின் குறுக்கீட்டும் வாய்ப்பிருக்கிறது.
உலகக்கோப்பைக்கு முன்னோட்டமாகப் பார்க்கப்படும், இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்ற ஆவலில் ரசிகர்கள் இருக்கின்றனர்.