Homeசெய்திகள்விளையாட்டுஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

-

 

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!
File Photo

ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

சேலத்தில் பெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை!

ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பீல்டிங் செய்த போது, அக்சர் படேலுக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது.

பேட்டிங்கின் போது, அவரது கை விரல்களில் பந்துத் தாக்கி அடிபட்டது. இதன் காரணமாக, சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் இலங்கை அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் களமிறங்க அதிக வாய்ப்பிருக்கிறது.

‘சமூக நீதி நாள்’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு!

அக்சர் படேலின் காயம் தீவிரமாக இருந்தால் உலகக்கோப்பைக்கான அணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டு, மாற்று வீரர் சேர்க்கப்படலாம். வாஷிங்டன் சுந்தர் கடைசியாக, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ