Homeசெய்திகள்விளையாட்டுஆசிய விளையாட்டு- இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய கிரிக்கெட் அணி!

ஆசிய விளையாட்டு- இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய கிரிக்கெட் அணி!

-

 

ஆசிய விளையாட்டு- இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய கிரிக்கெட் அணி!
File Photo

ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய கிரிக்கெட் அணி.

காவிரியில் நீர் திறக்க கர்நாடகா மறுப்பு-வைகோ கண்டனம்

19வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனா நாட்டின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, வங்கதேசம் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய வங்கதேசம் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்திய அணி தரப்பில், சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தலைமை ஆசிரியர் முட்டி போட வைத்து தண்டித்ததால் மாணவிகள் எதிர்ப்பு

அதைத் தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணி 9.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 97 ரன்களை எடுத்து, வங்கதேசம் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய கிரிக்கெட் ஆண்கள் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்களையும், திலக் வர்மா 55 ரன்களையும் எடுத்தனர்.

MUST READ