Homeசெய்திகள்விளையாட்டுஆசிய விளையாட்டு- இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி!

ஆசிய விளையாட்டு- இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி!

-

 

ஆசிய விளையாட்டு- இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி!
File Photo

ஆசிய விளையாட்டு மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி, பதக்கத்தை உறுதிச் செய்தது. வங்கதேசம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய இந்திய அணி அபாரம்!

சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய வங்கதேசம் அணி 17.5 ஓவரில் 51 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அரையிறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை பூஜா வஸ்த்ரகர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 8.2 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 52 ரன்களை எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி, இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து, ஆசிய விளையாட்டுப் போட்டியில் மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.

ஆசிய விளையாட்டு- அடுத்தடுத்து வெள்ளிப்பதக்கம் வென்றது இந்தியா!

ஏற்கனவே, சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவுக்கு 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தாக்கத்து.

MUST READ