ஆசிய விளையாட்டுப் போட்டியில் அடுத்தடுத்து இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்று இந்தியா தனது பதக்க வேட்டையைத் தொடங்கியுள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பதக்கத்திற்காக நடைபெற்ற முதல் போட்டியிலேயே மகளிரணி பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க வேட்டையைத் தொடக்கி வைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் மகளிரணி வெள்ளி பதக்கங்களை வென்றது.
“நான் குறிப்பிட்டுக் கூறியதை அவர் கவனிக்க மறந்துவிட்டார்”- அண்ணாமலை!
அவர்களைத் தொடர்ந்து துடுப்புப் படகுப்போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது. அர்ஜுன் லால், அரவிந்த் சிங் இணை இந்த சாதனையைப் படைத்தது.