ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா அணி வீழ்த்தியது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டித் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்கொரியா உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்திய தான் விளையாடிய முதல் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த நிலையில், குருப் சுற்றில் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை எதிர்கொண்டது. போட்டி தொடங்கிய 9வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் அகமது நதிம் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதனை தொடர்ந்து, போட்டியின் 13 மற்றும் 19வது நிமிடங்களில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரித் சிங் கோல் அடித்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறச் செய்தார்.
குருப் சுற்றில் தான் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, உற்சாகத்துடன் அரையிறுதியில் களமிறங்குகிறது.