Homeசெய்திகள்விளையாட்டுஆசிய விளையாட்டுப் போட்டி- இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!

ஆசிய விளையாட்டுப் போட்டி- இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!

-

 

ஆசிய விளையாட்டு- இந்திய அணி பங்கேற்கும் என அறிவிப்பு!
Photo: BCCI

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீன நாட்டின் ஹாங்சோவ் நகரில் வரும் செப்டம்பர் 23- ஆம் தேதி முதல் அக்டோபர் 8- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கிரிக்கெட் உள்பட 40 வகையான விளையாட்டுகள் இடம் பெறுகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் என பி.சி.சி.ஐ. ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணியில் ஜெய்ஷ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் முகமது, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஷிவம் மாவி, ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல், மாற்று வீரர்களின் பட்டியலில் யாஷ் தாக்கூர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சாய் சுதர்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

காமராஜர் பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

இதையடுத்து, சீனாவில் செப்டம்பர் 28- ஆம் தேதி முதல் அக்டோபர் 8- ஆம் தேதி வரை நடைபெறும் 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.

MUST READ